search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மெரில் நிறுவனத்தின் நவீன உற்பத்தி ஆலையை திறந்து வைத்த பிரதமர்
    X

    மெரில் நிறுவனத்தின் நவீன உற்பத்தி ஆலையை திறந்து வைத்த பிரதமர்

    • குஜராத் மாநில அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) மெரில்(MERIL) கையொப்பமிட்டிருந்தது.
    • இதன்மூலம் இன்றியமையாத மருத்துவ சாதனங்களின் இறக்குமதியை கணிசமாக குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    வாபி, குஜராத், இந்தியா- [29.10.2024] –மருத்துவதொழில்நுட்பதுறையில் (MEDTECH) உலகளவில் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனமாக இயங்கிவரும் மெரில் (MERIL)– ன் சாதனை பயணத்தில் இன்றைய தினம் ஒரு முக்கியமான மைல் கல் நிகழ்வாகும். உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI), திட்டத்தின்கீழ், மெரில் (MERIL) நிறுவியிருக்கும் ஒரு மிக நவீன உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார்.

    குஜராத் முதல்வர் பூபேந்திர பாய் பட்டேல், வாபியில்அமைந்துள்ள மெரில் (MERIL) நிறுவனத்தின் தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்ற இத்தொடக்கவிழா நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டார்.

    மருத்துவ சாதனங்களின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் ஏற்றுமதியாளர் என புகழ்பெற்றிருக்கும் மெரில் (MERIL), மருத்துவ தொழில்நுட்பதுறையில் இந்நாட்டின் சிறப்பான சாத்தியத்திறனை வெளிப்படுத்தும் வகையில், தனது ஏற்றுமதியின் மூலம் உலகமெங்கும் இந்தியாவின் கால்தடத்தை வலுவாகப் பதித்திருக்கிறது.

    வெளிநாடுகளிலிருந்து மருத்துவ சாதனங்களின் இறக்குமதி மீது இந்தியாவின் சார்ந்திருப்பு நிலையை மெரில் (MERIL) தனது தயாரிப்பு செயல்பாட்டின் மூலம் தீவிரமாக குறைத்து வருகிறது. அத்துடன்சுயநிறைவுள்ளஇந்தியாஎன்றகுறிக்கோளுக்கும், செயல்திட்டத்திற்கும் வலுவான ஆதரவை வழங்கி வருகிறது.

    2024 துடிப்பான குஜராத் உச்சி மாநாட்டின்போது மருத்துவ சாதனங்கள் துறையில் ரூ.910 கோடி புதிய முதலீடுகள் செய்யப்படும் என்ற பொறுப்புறுதியை வழங்கி குஜராத் மாநில அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) மெரில்(MERIL) கையொப்பமிட்டிருந்தது.

    இன்றைய நாள் வரை 1400 கோடிக்கும் அதிகமான தொகையை மெரில் (MERIL)முதலீடு செய்திருப்பது, இந்தியாவின் மருத்துவ தொழில்நுட்பதுறையில் இந்நிறுவனம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை இந்த மிகப்பெரிய முதலீடு தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த முதலீடானது, 5000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மற்றும் இதன்மூலம் இன்றியமையாத மருத்துவ சாதனங்களின் இறக்குமதியை கணிசமாக குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    "சுகாதார பராமரிப்பு துறையில் சுயசார்ப்பிற்கான இந்தியாவின் தொலைநோக்குதிட்டத்திற்கு இணக்கமானதாக, பிஎல்ஐ செயல் திட்டத்தின்கீழ், அங்கீகரிக்கப்பட்டிருப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய உற்பத்தி ஆலை, புதிய தொழில்நுட்பம் மற்றும் தரம் மீது மெரில் (MERIL) கொண்டிருக்கும் பொறுப்புறுதியை பிரதிபலிக்கிறது.

    இப்பொறுப்புறுதியே உலகமெங்கும் 150 நாடுகளில், மேம்பட்ட, நவீன சுகாதார பராமரிப்பு தீர்வுகளை நாங்கள் வழங்குவதை ஏதுவாக்கி வருகிறது. இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் 12 மெரில் (MERIL) அகாடமிகளை கொண்டிருக்கும் நாங்கள் உலகெங்கிலும் உள்ள சுகாதார பராமரிப்பு தொழில் முறை பணியாளர்கள் திறனதிகாரம் பெறுவதற்காக கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றின் மீதும் சமஅளவிலான அர்ப்பணிப்புடன் நாங்கள் செயல்படுகிறோம்." என்று மெரில் (MERIL) நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கூறினார்.

    பிஎல்ஐ திட்டத்தின்கீழ், அமைப்பு ரீதியிலான இதய, இரத்தநாள இடையீட்டுசெயல்பாடுகள், எலும்பு முறிவியல் மற்றும் எண்டோசர்ஜரி ஆகிய பிரிவுகளில் மெரில் (MERIL) குழுமத்தின் நான்கு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உள்நாட்டிலேயே சுகாதாரதுறைக்கு மிக அத்தியாவசியமான சாதனங்கள் உற்பத்திக்கு இதன் மூலம் ஆதரவளித்து வருகின்றன.

    மெரில் (MERIL)குறித்து: 2007-ம் ஆண்டில், நிறுவப்பட்ட மெரில் (MERIL) நிறுவனம், இதய இரத்தநாளம், எலும்புமுறிவியல், எண்டோசர்ஜரி, அறுவை சிகிச்சைக்கான ரோபோட்டிக்ஸ் மற்றும் நோயறிதல் சாதனங்கள் என ஐந்து முக்கியமான பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.

    10,000– க்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் 150-க்கும் கூடுதலான நாடுகளில் செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் மெரில் (MERIL), 31 நாடுகளில் நேரடியான துணை நிறுவனங்களை நிறுவியிருக்கிறது. 12 நாடுகளில் இயங்கிவரும் இதன் கல்விசார் பிரிவான மெரில் (MERIL) அகாடமி, சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பங்களில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நேரடி பயிற்சியினை வழங்கிவருகிறது.

    உலகளவில் சுகாதாரப் பராமரிப்பு செயல்பாடுகளை முன்னேற்றம் காணச்செய்வதில் மெரில் (MERIL) கொண்டிருக்கும் பொறுப்புறுதியை வலுப்படுத்துவதாக இந்த கல்விசார் நடவடிக்கை அமைந்திருக்கிறது.

    விவரங்களுக்கு: corpcomm@merillife.com

    Next Story
    ×