search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சரத் பவார் போட்டோவுடன் பப்ளிசிட்டி.. சொந்த காலில் நிற்க  அஜித் பவாருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை
    X

    சரத் பவார் போட்டோவுடன் பப்ளிசிட்டி.. சொந்த காலில் நிற்க அஜித் பவாருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

    • சரத் பவார் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை உடைத்து கடந்த 2023 இல் பாஜகவில் சேர்ந்தார்
    • சரத் பவாரின் பழைய வீடியோக்களை பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    288 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் மாகாயுதி [பாஜக - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் - ஷிண்டே சிவசேனா] மற்றும் மகா விகாஸ் அகாதி [காங்கிரஸ் - சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா] ஆகிய இரண்டு கூட்டணிகள் களத்தில் உள்ளன. இரு தரப்பு தேசிய தலைவர்களும் மகாராஷ்டிராவில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பாஜக கூட்டணியில் உள்ள தேசியவாத தலைவர் மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார்ம், சரத் பவார் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை உடைத்து கடந்த 2023 இல் பாஜகவில் சேர்ந்தவர் ஆவார். தேசியவாத கட்சியின் கடிகார சின்னம் அஜித் பவார் வசமே உள்ளது.

    இந்நிலையில் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் மக்களை கவர சரத் பவாரின் புகைப்படம் உள்ளிட்டவரை அஜித் பவார் அணி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அஜித் பவார் அணி சமூக வலைத்தள பதிவுகள் உள்ளிட்டவற்றில் சரத் பவாரின் பழைய வீடியோக்களை பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சரத் பவார் அணி உச்சநீதிமன்றத்தில் புகார் மனு அளித்திருந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின்போது சரத் பவார் அணி தரப்பு வக்கீலின் வாதங்களை கேட்டறிந்த பின்னர், சரத்பவாரின் புகைப்படம், வீடியோவை பயன்படுத்தாதீர்கள் என்றும் சொந்த காலில் நிற்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அஜித் பவாருக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

    Next Story
    ×