search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஞானவாபியில் பூஜைகள் தொடங்கியது- துணை ராணுவப் படை குவிப்பு

    • இந்து கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
    • மசூதி அமைந்த இடத்தில் முன்பு இந்து கோவில் இருந்ததாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    வாரணாசி:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின் பேரில் இங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

    இந்திய தொல்லியல்துறை நடத்திய அறிவியல்பூர்வ ஆய்வு அறிக்கையில் மசூதி அமைந்த இடத்தில் முன்பு இந்து கோவில் இருந்ததாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் ஒரு வாரத்திற்குள் இந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஞானவாபியில் நேற்று நள்ளிரவு பூஜை தொடங்கி ஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தது. ஞானவாபி வளாக கணக்கெடுப்பின் போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. மேலும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    இதையொட்டி அப்பகுதியில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×