என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வழக்குப்பதிவு செய்து மிரட்ட முடியாது: ராகுல் காந்தி
- கவுகாத்தியில் நடைபயணம் மேற்கொள்ள அசாம் மாநில அரசு தடை.
- தடையை மீற நடைபயணம் மேற்கொள்ள முயன்றதால் தடுத்தி நிறுத்தம். வழக்குப்பதிவு.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கவுகாத்தியில் நுழைய அம்மாநில அரசு தடைவிதித்த நிலையில், ராகுல் காந்தி நடைபயணம் கவுகாத்தியில் நுழைய முயன்றது. அப்போது போலீசார் நடைபயணத்தை தடுத்து நிறுத்தினர்.
அதன்பின் மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் பார்பெட்டா மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
வழக்குகள் பதிவு செய்து என்னை மிரட்ட முடியும் என்ற யோசனை ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு எப்படி தோன்றியது என எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்மீது பல வழக்குகள் பதிவு செய்ய முடியும். 25-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யுங்கள். ஆனால், என்னை மிரட்ட முடியாது. பிஜேபி- ஆர்எஸ்ஸ் ஆகியவற்றால் என்னை மிரட்ட முடியாது.
பா.ஜனதா- ஆர்.எஸ்.எஸ். மொழி, கலாச்சாரம், அசாமின் வரலாற்றை அழிக்க விரும்புகிறது. நாக்பூரில் இருந்து அசாமை வழிநடத்த விரும்புகிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அசாமில் இருந்து மட்டுமே அசாம் இயக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.