search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இதனால தான் மகளிர் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.. பா.ஜ.க.வை சீண்டிய ராகுல் காந்தி
    X

    இதனால தான் மகளிர் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.. பா.ஜ.க.வை சீண்டிய ராகுல் காந்தி

    • மக்கள் இதை கண்டு கொள்ளாததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.
    • பா.ஜ.க. தற்போது புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கேள்விகளால் துளைத்து எடுத்தார். மகளிர் இடஒதுக்கீடு ஏன் நிறைவேற்றப்பட்டது, பா.ஜ.க. ஏன் இதில் இத்தனை அவசரம் காட்டியது என்பது பற்றியும் அவர் பேசியுள்ளார்.

    இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய அரசு சார்பில் எந்த விதமான தகவல்களும் வழங்கப்படவே இல்லை. பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் இந்தியா vs பாரத் பற்றிய விவாதத்திற்கு தான் என்று அவர்கள் முதலில் சொன்னார்கள். ஆனால், மக்கள் இதை கண்டுக்கொள்ளாததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். மேலும் சிறப்புக் கூட்டம் அறிவிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தனர்."

    "நாங்கள் இந்த மசோதாவை ஆதரித்தோம். பா.ஜ.க. தற்போது புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் முறையாக எல்லைகளை கட்டமைத்த பிறகே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமலுக்கு கொண்டுவருவோம் என்று அறிவித்து இருக்கிறது. உண்மையில், 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனே அமலுக்கு கொண்டுவர முடியும்."

    "ஆனால், பா.ஜ.க. இடஒதுக்கீட்டை பத்து ஆண்டுகளுக்கு தாமதப்படுத்த நினைக்கிறது. மேலும் இந்த இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினர் பயன்பெறக் கூடாது என்றும் பா.ஜ.க. நினைக்கிறது," என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×