என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ராகுல்காந்தியின் சாதி என்ன.. அவர் கிறிஸ்தவரா முஸ்லிமா? - பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து
- ராகுல் காந்திக்கு அவர் பிறந்த சாதியே தெரியாது.
- ராகுல்காந்தி தன்னை பிராமணர் என்று கூறினால் அவர் பூணூல் அணிகிறாரா?..
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் சாதி என்ன? என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. பசங்கௌடா பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அவர் "ராகுல் காந்தி அமெரிக்க சென்று நாட்டிற்கு எதிரான கருத்துக்களை பேசுகிறார். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆனால் அவருக்கு அவர் பிறந்த சாதியே தெரியாது. அவர் தன்னை பிராமணர் என்று கூறினால் அவர் எந்த பிராமண பிரிவை சேர்ந்தவர். அவர் பூணூல் அணிகிறாரா?... அவர் கிறிஸ்தவரா முஸ்லிமா என்பதை விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பசங்கௌடா பாட்டீல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அல்ல சுபாஷ் சந்திரபோஸ் தான் என்று கடந்தாண்டு அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என்று ராகுல்காந்தியை குறிப்பிட்டு கடந்த ஜூலை மாதம் மக்களைவையில் பாஜக எம்.பி அனுராக் தாகூர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை பிரதமர் மோடி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.