என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கோலாரில் இன்று நடக்க இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
- பிரதமர் மோடி இன்று புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார்.
- வருகிற 16ம் தேதி அந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்த கோலாரில் நீதிகேட்டு 'மகாத்மா காந்தியின் வாய்மையே வெல்லும்' என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்த கர்நாடக காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. மேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ராகுல் காந்தியின் முதல்கூட்டமாகவும் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக அந்த பொதுக்கூட்டம் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து 6ம் தேதிக்கும், பின்னர் 9ம் தேதிக்கும், தொடர்ந்து 10ம் தேதிக்கும் மாற்றப்பட்டு இருந்தது. ஆனால் 9ம் தேதி (இன்று) பிரதமர் மோடி புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார்.
இதனால் இன்று கோலாரில் நடக்க இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் தேதி 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது வருகிற 16ம் தேதி அந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.