search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Inspiration: அவமானப்பட்ட இடத்தில் சாதித்துக் காட்டிய ரத்தன் டாடா
    X

    Inspiration: அவமானப்பட்ட இடத்தில் சாதித்துக் காட்டிய ரத்தன் டாடா

    • டாடா இண்டிகா கார் மாடலை அறிமுகம் செய்தார்.
    • டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    டாடா குழுமத்தை உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக மாற்றிய பெருமைக்குரிய ரத்தன் டாடா, தனது 86வது வயதில் காலமானார்.

    தனது விடாமுயற்சி காரணமாக, ரத்தன் டாடா இந்தியாவின் முதல் வெற்றிகரமான கார் நிறுவனத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், புகழ் பெற்ற பிரிட்டிஷ் கார் பிராண்டையும் விலைக்கு வாங்கினார். தற்போது டாடா மோட்டார்ஸ் பிரிவில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவரை ரத்தன் டாடா வாங்கிய சம்பவத்திற்கு பின் நடந்தவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    1998 ஆம் ஆண்டில், ரத்தன் டாடா தனது கனவுத் திட்டமான டாடா இண்டிகா கார் மாடலை அறிமுகம் செய்தார். இது டீசல் எஞ்சினுடன் கூடிய நாட்டின் முதல் ஹேட்ச்பேக் மாடல் ஆகும். விற்பனை குறைவாக இருந்ததால் டாடா மோட்டார்ஸை அமெரிக்க ஆட்டோ நிறுவனமான ஃபோர்டுக்கு விற்க முடிவு செய்தார்.


    1999ல் அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் மும்பை வந்து டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டெட்ராய்டில் அந்த நிறுவனத்தின் தலைவர் பில் ஃபோர்டு-ஐ ரத்தன் டாடா சந்தித்தார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில், பில் ஃபோர்டு இழிவான தொனியில் பேசி தொழிலதிபரை அவமானப்படுத்தினார்.

    பயணிகள் வாகன பிரிவு பற்றி எதுவுமே தெரியாத டாடாவிடம் ஏன் இந்த தொழிலை தொடங்கினார் என்று கேட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

    "உங்களுக்கு எதுவும் தெரியாது, நீங்கள் ஏன் பயணிகள் கார் பிரிவைத் தொடங்கியுள்ளீர்கள்" என்று ஃபோர்டு அதிகாரிகள் டாடாவிடம் கூறியுள்ளனர். மேலும் பிந்தைய வணிகத்தை வாங்குவதன் மூலம் இந்திய நிறுவனத்திற்கு உதவி செய்வது பற்றி பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஃபோர்டு மற்றும் டாடா இடையிலான ஒப்பந்தம் முன்னெடுக்கப்படவில்லை.

    அதன்பிறகு இந்தியா திரும்பிய ரத்தன் டாடா தனது கார் வியாபாரத்தை விற்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதில் இருந்து சரியாக ஒன்பது ஆண்டுகள் கழித்து 2008 ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது, டாடா மோட்டார்ஸ் வெற்றிகர நிறுவனமாக உருவெடுத்தது.


    வெற்றிகரமாக இருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளை விலைக்கு வாங்க முன்வந்தது. இது தொடர்பான ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறுதி செய்யப்பட்டது. இரு நிறுவனங்கள் இடையே 2.3 பில்லியன் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த தருணத்தில் ஃபோர்டு தலைவர் பில் ஃபோர்டு ரத்தன் டாடாவுக்கு நன்றி தெரிவித்தார்.

    "ஜாகுவார், லேண்ட் ரோவரை வாங்குவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்கின்றீர்கள்," என்று பில் ஃபோர்டு தெரிவித்ததாக பிரவின் கேடில் தெரிவித்தார்.

    Next Story
    ×