என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
2000 ரூபாய் நோட்டு வடிவில் திருமண அழைப்பிதழ்- ஆச்சரியத்துடன் வாங்கிப் பார்த்த உறவினர்கள்
BySuresh K Jangir27 Jan 2023 10:40 AM IST (Updated: 27 Jan 2023 2:30 PM IST)
- ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். வியாபாரி.
- தனது மகள் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து வழங்க முடிவு செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். வியாபாரி. இவரது இளைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர் தனது மகள் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து வழங்க முடிவு செய்தார். அதன்படி 2000 ரூபாய் நோட்டை போன்று அதே அளவில் மணமகள்- மணமகன் ஆகியோர் பெயர்களை முன்புறத்தில் அச்சடித்தார். பின்புறத்தில் திருமண விவரங்கள் இருந்தன.
திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கிய போது 2000 ரூபாய் நோட்டை வாங்கியது போன்ற உணர்வு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வெங்கடேஷ் ஏற்கனவே தனது மூத்த மகள் திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண அழைப்பிதழை வித்தியாசமாக வழங்கிய வெங்கடேஷை பலரும் பாராட்டினர்.
Next Story
×