என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சமூக வலைதளத்தில் மோதிய பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் - காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
- கர்நாடகாவில் பெண் அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் போக்கு வைரலானது.
- அவர்கள் இருவரையும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்தது அம்மாநில அரசு.
பெங்களூரு:
கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்துரி, பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரை சந்தித்த புகைப்படத்தை ரூபா ஐ.பி.எஸ். வெளியிட்டார். சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலருக்கு ரோகிணி சிந்துரி அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக ரூபா குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரை மனநோயாளி என விமர்சித்தார் ரோகிணி சிந்துரி.
இந்நிலையில், இரு அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் போக்கு வைரலானதைத் தொடர்ந்து பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை கூறி மோதிக்கொண்ட ரோகிணி சிந்துரி ஐ.ஏ.எஸ். மற்றும் ரூபா ஐ.பி.எஸ். ஆகிய இருவரையும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.