search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்கள் பிரச்சனைகள் பற்றி ராகுலுக்கு ஏ.பி.சி.டி. கூட தெரியாது-கிரண் ரிஜிஜூ
    X

    எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்கள் பிரச்சனைகள் பற்றி ராகுலுக்கு ஏ.பி.சி.டி. கூட தெரியாது-கிரண் ரிஜிஜூ

    • முஸ்லிம்களுக்கு எனது எச்சரிக்கை, காங்கிரசின் வாக்கு வங்கியாக மாறாதீர்கள்.
    • காங்கிரஸ் கட்சியின் பிரித்து ஆட்சி செய்யும் கொள்கைளால் பாதிக்கப்படாதீர்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரண்ரிஜிஜூ தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முஸ்லிம்களுக்கு எனது எச்சரிக்கை, காங்கிரசின் வாக்கு வங்கியாக மாறாதீர்கள். அதேபோல் இந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது எச்சரிக்கை, காங்கிரஸ் கட்சியின் பிரித்து ஆட்சி செய்யும் கொள்கைளால் பாதிக்கப்படாதீர்கள்.

    முஸ்லிம்கள் எப்போதும் தனக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. இவ்வாறான சிந்தனை செயல்பாட்டிற்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அபிவிருத்தி அடையும்.

    இந்துக்களை பிளவுப்படுத்தும் அதே வேளையில் முஸ்லிம்களை தனது வாக்கு வங்கியாக வைத்திருப்பதே காங்கிரஸ் திட்டமிடலின் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.


    எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ராகுல்காந்திக்கு ஏ.பி.சி.டி. கூட தெரியாது. ஆனாலும் அவர் எப்போதும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்களை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்.

    எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பாடத்தில் பேசுவதன் மூலம் அவர் அப்படி பேச கற்றுக்கொண்டார்.

    கடந்த 60 வருடங்களில் உங்களை ஏழைகளாக்கியது யார் என்று எங்கள் முஸ்லிம்களிடம் கேட்க விரும்புகிறேன். இன்று பிரதமர் மோடி உங்களுக்காக வங்கி கணக்குகளை திறந்து உங்களுக்காக வீடுகளை கட்டி கொடுக்கிறார்.

    தண்ணீர், மின்சாரம் மற்றும் கடன்களை வழங்குகிறார். அவர் அனைத்து இந்தியர்களையும் சமமாக நடத்துகிறார். பலன் எல்லோருக்கும் செல்கிறது. அப்படி இருக்க முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் காங்கிரசுக்கு ஏன் போக வேண்டும்.

    ஒரு சமூகத்தை தவறாக பயன்படுத்துவது தவறான விஷயம். முஸ்லிம்களை வாக்கு வங்கியாக ஆக்காதீர்கள் என்று காங்கிரசை எச்சரிக்கிறேன்.

    இந்த முறை சிறுபான்மை வாக்குகள் காங்கிரசுக்கு போகாமல் பார்த்துக் கொள்வோம். நாங்கள் தெளிவான பார்வையுடன் மக்களிடம் செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×