search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதன் முறையாக திருநங்கைக்கு பாலியல் தொல்லை- 4 பேர் கைது
    X

    முதன் முறையாக திருநங்கைக்கு பாலியல் தொல்லை- 4 பேர் கைது

    • ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும்.
    • சட்டத்தை திருநங்கைகள் எந்த ஒரு நேரத்திலும் தவறாக பயன்படுத்த கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 26 வயது திருநங்கை. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகதாம்பா சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்தார். பின்னர் வீடு திரும்ப ஒரு ஆட்டோவில் ஏறினார்.

    அந்த ஆட்டோவில் ஏற்கனவே 3 வாலிபர்கள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் திருநங்கையின் மீது கை வைத்து தொடங்கினர்.

    தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதனை தடுத்த திருநங்கையை அடித்து துன்புறுத்தினர். அதனால் திருநங்கை அழுது கூச்சலிட்டார்.

    பயத்தில் அவர்கள் நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தினர். அதிலிருந்து திருநங்கை இறங்கி தப்பி ஓடினார்.

    இதுகுறித்து திருநங்கை அங்குள்ள திஷா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதன் மூலம் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ டிரைவர் வாசுபள்ளி சீனிவாசு (வயது 33), ஹனிஷ்குமார்(26), சதீஷ்குமார் (30), மனோஜ் குமார் ( 23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும்.

    ஆனால் இந்த சட்டத்தை திருநங்கைகள் எந்த ஒரு நேரத்திலும் தவறாக பயன்படுத்த கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    தயவு செய்து திருநங்கைகள் இதை சாதகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

    Next Story
    ×