search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் சம்மதித்தாலும்.. ஏமாற்றியோ பயமுறுத்தியோ நடக்கும் பாலியல் உறவு பலாத்காரமே - உயர்நீதிமன்றம்
    X

    பெண் சம்மதித்தாலும்.. ஏமாற்றியோ பயமுறுத்தியோ நடக்கும் பாலியல் உறவு பலாத்காரமே - உயர்நீதிமன்றம்

    • பெண்ணை பயமுறுத்தியோ, ஏமாற்றியோ பாலியல் உறவு வைத்துக்கொள்வது சட்டத்தின்கீழ் பலாத்காரமாக கருதப்படும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    • அந்த நபர் மீது சட்டப்பிரிவு 376 இன் கீழ் பலாத்கார வழக்கு பதியப்பட்டிருந்தது.

    பெண்ணை பயமுறுத்தியோ, ஏமாற்றியோ பாலியல் உறவு வைத்துக்கொள்வது சட்டத்தின்கீழ் பலாத்காரமாக கருதப்படும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபர் பெண் சுயநினைவு இல்லாத நிலையில் பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அதன்பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தொடர்ந்து பல முறை பாலியல் உறவு வைத்துள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. அந்த நபர் மீது சட்டப்பிரிவு 376 இன் கீழ் பலாத்கார வழக்கு பதியப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தன்மீதான குற்றப்பத்திரிகையை எதிர்த்து தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அந்த நபர் மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் வாதாடிய வக்கீல், பெண்ணின் அனுமதியுடனேயே இருவரும் பாலியல் உறவில் இருந்தனர் என்றும் இது பலாத்காரத்தின் கீழ் வராது என்றும் அந்த வக்கீல் வாதாடியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இருவரும் இடையிலான உறவு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதன் மூலம் தொடர்ந்துள்ளது என்று வாதிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த உறவு பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளபடி ஏமாற்றியும் மிரட்டல் மூலமும் நடந்துள்ளது. பெண்ணின் அனுமதியுடனேயே இருவருக்கும் இடையில் பாலியல் உறவு இருந்தாலும் அது பெண்ணை பயமுறுத்தியும், தவறாக வழிநடத்தியும் இருக்குமாயின் பலாத்காரத்துக்கான சட்டப்பிரிவு 376 இந்த கீழ் வரும் என்று தெரிவித்து அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்து இந்த வழக்கு தொடர்பாக பலாத்காரம் என்ற முகாந்திரத்திலேயே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×