search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஸ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்தது எப்படி?- கோர்ட்டில் டெல்லி போலீசார் புதிய தகவல்
    X

    அப்தாப்- ஸ்ரத்தா.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஸ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்தது எப்படி?- கோர்ட்டில் டெல்லி போலீசார் புதிய தகவல்

    • அப்தாப் பிரபலமான தாஜ் ஹோட்டலில் சமையல் பயிற்சி பெற்றவர் என்றும், சதையை எப்படி பாதுகாப்பது என்றும் அவருக்கு தெரியும்.
    • ஸ்ரத்தாவை கொலை செய்த பிறகு தரையை சுத்தம் செய்ய உலர்ந்த ஐஸ் மற்றும் ரசாயனங்களை அப்தாப் பயன்படுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு டெல்லியில் ஸ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் என்பவர் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    தலையை துண்டித்து வீட்டில் உள்ள 300 லிட்டர் பிரிட்ஜில் வைத்திருந்த அவர், வீட்டில் நாற்றம் வராமல் இருப்பதற்காக நறுமணங்களை பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அப்தாபை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற போலீசார் சுமார் 6,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    அப்தாப்பிற்கும், ஸ்ரத்தாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்ததாலும், ஸ்ரத்தாவிடம் அப்தாப் அதிகளவில் பணம் கேட்ட பிரச்சினையிலும் கொலை நடந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் சம்பவத்தன்று ஸ்ரத்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்த அப்தாப் உடல் பாகங்களை கூறு போட்டு கொஞ்சம், கொஞ்சமாக அப்புறப்படுத்தி உள்ளார் என்பது போன்ற விபரங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கூடுதல் தகவல்களை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதில், அப்தாப் ஒரு பயிற்சி பெற்ற சமையல் கலைஞர். அவர் பிரபலமான தாஜ் ஹோட்டலில் சமையல் பயிற்சி பெற்றவர் என்றும், சதையை எப்படி பாதுகாப்பது என்று அவருக்கு தெரியும்.

    ஸ்ரத்தாவை கொலை செய்த பிறகு தரையை சுத்தம் செய்ய உலர்ந்த ஐஸ் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்தி உள்ளார். ஸ்ரத்தாவை கொலை செய்த ஒரு வாரத்தில் அப்தாப் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஸ்ரத்தாவிற்கு முன்பு கொடுத்த மோதிரத்தை தனது புதிய காதலிக்கு அவர் பரிசளித்துள்ளார் என்ற விபரங்களையும் டெல்லி போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே அப்தாப் உயர்கல்வி படிக்க விரும்புவதாகவும், இதற்காக கல்வி சான்றிதழ்களை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என டெல்லி கோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளார்.

    Next Story
    ×