search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம்: சித்தராமையா பேட்டி
    X

    காங்கிரஸ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம்: சித்தராமையா பேட்டி

    • பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் வெற்றி பெறமுடியவில்லை.
    • பா.ஜ.க. விற்கு மக்கள் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

    மைசூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது. இந்தநிலையில் மைசூரு மாட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம் மகாராணி கல்லூரிக்கு முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. கட்சி பொய்யான வாக்குறுதிகள், ஊழல், 40 சதவீதம் கமிஷன், லஞ்சம், ஆகியவற்றால் தோல்வி அடைந்து உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் வெற்றி பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் கர்நாடகத்தில் நடத்திய 'ரோடு ஷோ'வால் எந்த பலனும் இல்லை. அதனால்தான் பா.ஜனதா கட்சி தொகுதிகள் குறைந்துள்ளது. மேலும் பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் செய்த ஊழல் வழக்குகள், மதக் கலவரம், வன்முறை போன்றவைகளால் மாநில மக்கள் அவதி அடைந்து வந்தனர். அதனால்தான் இந்த தடவை பா.ஜ.க. விற்கு மக்கள் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

    கர்நாடக மக்களுக்கு நல்லா தெரியும் இங்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா யாரு வந்து வாக்கு கேட்டாலும் வெற்றி பெற முடியாது. இதனை நாங்கள் முன்பே கூறியுள்ளோம். நாங்கள் 130-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நானும்(சித்தராமையா) டி.கே. சிவக்குமாரும் 130 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறினோம். அதைபோல் வெற்றி பெற்று உள்ளோம். வருணா தொகுதியில் என்னை வெற்றி பெற செய்ததற்கு மக்களுக்கும், 6 கோடி கர்நாடக மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும்

    காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் மைசூரு மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    Next Story
    ×