search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    விரலில் வைக்கப்படும் அழியாத மை எங்கு தயாரிக்கப்படுகிறது? எவ்வளவு செலவு எனத் தெரியுமா?
    X

    விரலில் வைக்கப்படும் அழியாத மை எங்கு தயாரிக்கப்படுகிறது? எவ்வளவு செலவு எனத் தெரியுமா?

    • தமிழ்நாட்டிற்கு 1.75 லட்சம் குப்பிகள் அழியாத மை சப்ளை செய்யப்பட்டுள்ளது.
    • அதிகபட்சமாக 15.30 கோடி வாக்காளர்களை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்திற்கு 3.64 லட்சம் குப்பிகள் சப்ளை.

    இந்தியா 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    வாக்குப்பதிவு நாளில் வாக்களித்த வாக்காளர் கையில் அழியாத மை இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும். வாக்காளர் வாக்களித்ததை உறுதி செய்வதற்காக இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.

    இந்த அழியாத மையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கும் பொறுப்பை 1962-ல் இருந்து கர்நாடகா அரசு பெற்றுள்ளது. இங்குள்ள மைசூர் பெயின்ட்ஸ் அண்டு வார்னிஷ் லிமிடெட் (The Mysore Paints and Varnish Ltd) என்ற நிறுவனம் இந்த அழியாத மையை தயாரித்து வழங்குகிறது.

    இந்த முறை மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தலுக்காக 26.55 லட்சம் அழியாத மை குப்பிகளை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்காக சுமார் 55 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கடந்த 2019 தேர்தலின்போது 25.98 லட்சம் அழியாத மை குப்பிகளை இந்த நிறுவனம் சப்ளை செய்திருந்தது. அதற்கான செலவு சுமார் 36 கோடி ரூபாய் ஆகும். தற்போது 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அழியாத மை அனுப்பும் பணி நிறைவடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக 15.30 கோடி வாக்காளர்களை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்திற்கு 3.64 லட்சம் குப்பிகள் சப்ளை செய்துள்ளதாகவும், குறைந்தபட்சமாக 57,500 வாக்காளர்களை கொண்ட லட்சத்தீவிற்கு 125 குப்பிகள் சப்ளை செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிராவிற்கு 2.68 லட்சம், மேற்கு வங்காளத்திற்கு 2 லட்சம், பீகாருக்கு 1.30 லட்சம், அந்திராவிற்கு 1.16 லட்சம், குஜராத்திற்கு 1.13 லட்சம், கேரளாவிற்கு 63 அயிரம், பஞ்சாப் மாநிலத்திற்கு 55 ஆயிரம், ஹரியானாவிற்கு 42 ஆயிரம், ராஜஸ்தானுக்கு 1.3 லசட்ம், தமிழ்நாட்டிற்கு 1.75 லட்சம், தெலுங்கானாவற்கு 1.5 லட்சம், மத்திய பிரதேசத்திற்க 1.52 லட்சம், கர்நாடகாவிற்கு 1.32 லட்சம், டெல்லிக்கு 35 ஆயிரம், ஜம்மு-காஷ்மீருக்கு 30 அயிரம் குப்பிகள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×