search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பாட்டு பாடியபடி டீ போடும் வியாபாரி- வீடியோ வைரல்
    X

    பாட்டு பாடியபடி டீ போடும் வியாபாரி- வீடியோ வைரல்

    • கடையில் தேனீர் பருகும் வாடிக்கையாளர்கள் விஜய் பாய் படேலின் இனிமையான குரலை ரசித்தபடியே டீ குடிக்கின்றனர்.
    • ஆன்-லைனில் பதிவிடப்பட்ட 1 மணி நேரத்தில் இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.

    சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் சாலையோர சிறு வியாபாரிகள் கூட தங்களது தனித்தன்மையால் பிரபலமாகி வருகிறார்கள். அவ்வாறு பிரபலமான நாக்பூரை சேர்ந்த டீ வியாபாரி ஒருவரது கடைக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இதே போன்று ரஜினிகாந்த் போன்று ஸ்டைலாக டீ வியாபாரி ஒருவர் கிளாஸ்களை வீசி பிடித்து டீ போடும் வீடியோவும் இணையத்தில் பரவி இருந்தது. இந்நிலையில் தற்போது சூரத்தை சேர்ந்த டீ வியாபாரி ஒருவர் பாட்டு பாடியபடியே டீ போடும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மும்பையை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் வைரல் பயானி என்பவர் இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் சூரத்தில் டீ கடை நடத்தி வரும் விஜய் பாய் படேல் என்பவர் பிரபலமான ஒரு இந்தி பாடலை பாடியபடியே டீ தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. கடையில் தேனீர் பருகும் வாடிக்கையாளர்கள் விஜய் பாய் படேலின் இனிமையான குரலை ரசித்தபடியே டீ குடிக்கின்றனர்.

    ஆன்-லைனில் பதிவிடப்பட்ட 1 மணி நேரத்தில் இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.



    Next Story
    ×