என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது- வைகோ
- தமிழக மீனவர்கள் 83 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள் தானே? இந்திய குடிமக்கள் எனில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதுடெல்லி:
கடந்த வாரம் தமிழக மீனவரின் படகில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர் ஒருவர் பலி, ஒருவர் மாயம். இப்போதும் தமிழக மீனவர்கள் 70 பேர் இலங்கை சிறையில் இருக்கிறார்கள். இலங்கை ராணுவம் பறிமுதல் செய்த 170 படகுகளையும் இதுவரை திருப்பி தரவில்லை. எனவே சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க வேண்டும். இலங்கை கட்டுப்பாட்டில் இருக்கும் 170 படகுகளையும் மீட்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ கையில் கட்டுடன் மாநிலங்களவையில் தமிழக மீனவர் பிரச்சனையை எழுப்பியுள்ளார்.
இது குறித்து வைகோ கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கிறது. தற்போதும் தமிழக மீனவர்கள் 83 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த 40 ஆண்டுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தமிழக மீனவரின் படகில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர் ஒருவர் பலி, ஒருவர் மாயம்.
தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள் தானே? இந்திய குடிமக்கள் எனில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.