search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் சட்டசபை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 34.74 சதவீதம் வாக்குகள் பதிவு
    X

    குஜராத் சட்டசபை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 34.74 சதவீதம் வாக்குகள் பதிவு

    • அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் பிரதமர் மோடி வாக்குசாவடி மையத்திற்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
    • இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதலே பொது மக்கள் வரிசை நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

    அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் பிரதமர் மோடி வாக்குசாவடி மையத்திற்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

    இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காந்திநகரில் 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 19.17 ஆக இருந்தது.

    இந்நிலையில், தற்போது 1 மணி நிலவரப்படி குஜராத் 2ம் கட்ட தேர்தலில் இதுவரை 34.74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    Next Story
    ×