என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவுக்கு 3-வது வந்தே பாரத் ரெயில்... 31-ந்தேதி முதல் இயக்கம்
- பெங்களூருவில் இருந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்திற்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.
திருவனந்தபுரம்:
ரெயில் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கவும், சொகுசான பயணத்தை கொடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் 2 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது 3-வது வந்தே பாரத் ரெயில் சேவை வருகிற 31-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது.
இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரெயிலாக வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது. மதியம் 12.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் அந்த ரெயில், இரவு 10 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும்.
அதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்திற்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.