search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேச விரோத விஷயங்களை ராகுல் காந்தி பேசுகிறார்... அமித்ஷா கடும் தாக்கு
    X

    தேச விரோத விஷயங்களை ராகுல் காந்தி பேசுகிறார்... அமித்ஷா கடும் தாக்கு

    • ராகுல் மனதில் இருந்த எண்ணங்கள் கடைசியில் வார்த்தைகளாக வந்து விட்டன.
    • பா.ஜ.க. இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது.

    புதுடெல்லி:

    பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும் போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என்று பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தெரிவித்தார்.

    இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துக்களை தெரிவிப்பதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகி விட்டது. ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தேச விரோத மற்றும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டுத் தளங்களில் இந்தியாவுக்கு எதிரான அறிக்கைகள் செய்வதாக இருந்தாலும் சரி, ராகுல் காந்தி எப்போதும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்து உணர்வுகளைப் புண்படுத்துகிறார்.

    பிராந்தியவாதம், மதம் மற்றும் மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்கிரசின் அரசியலை ராகுல் காந்தியின் அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

    நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தியுள்ளார். அவர் மனதில் இருந்த எண்ணங்கள் கடைசியில் வார்த்தைகளாக வந்து விட்டன.

    பா.ஜ.க. இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    Next Story
    ×