search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-3: லைவ் அப்டேட்ஸ்
    X

    விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-3: லைவ் அப்டேட்ஸ்

    • 40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
    • விண்கலகத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூரு உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிப்பார்கள்.

    சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.-3 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    Live Updates

    • 14 July 2023 9:37 AM GMT


      விக்ரம் சாராபாய் கண்ட கனவு நனவாகி கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் பிரதமர் மோடிக்கும் நன்றி- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்


    • 14 July 2023 9:36 AM GMT

      நிலவில் சந்திரயான் இறங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சந்திரயான் 3-ன் அனைத்து செயல்பாடுகளும் சரியாக உள்ளது- வீர முத்துவேல்

    • 14 July 2023 9:35 AM GMT

      ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் புவி சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது. ராக்கெட்டில் இருந்து சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    • 14 July 2023 9:32 AM GMT

      இது பெருமையான தருணம். சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த சிறப்பு தருணம் என்னெற்றும் நினைவில் இருக்கும்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

    Next Story
    ×