search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜோத்பூரில் சிலிண்டர் வெடித்து விபத்து- இதுவரை 32 பேர் பலி
    X

    ஜோத்பூரில் சிலிண்டர் வெடித்து விபத்து- இதுவரை 32 பேர் பலி

    • காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக, காங்கிரஸ் அரசை அம்மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் துணைப்பிரிவில் உள்ள புங்ராவில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக, காங்கிரஸ் அரசை அம்மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான பாதயாத்திரையின் 100 நாட்களை குறிக்கும் வகையில் ஜெய்ப்பூரில் இசைக் கச்சேரிக்கு அம்மாநில அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்வர் கெலாட், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மாநிலத்தில் இதுபோன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்து, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவதற்கு பதிலாக, மாநில அரசு கொண்டாட்டதில் ஈடுபட்டு மேலும் காயத்தை சேர்க்கிறது.

    பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் ரூ. 20 கோடி தொகுப்பை மாநில அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×