என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பா.ஜ.க. தலைமை அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு
- கெஜ்ரிவால் கைதை கண்டித்து பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆம் ஆத்மி அறிவித்து இருந்தது.
- டிடியு மார்க்கில் ஏற்கனவே 144 தடை உத்தரவு இருக்கிறது.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் சி.பி.ஐ.யும் அவரை கைது செய்துள்ளது.
இந்த நிலையில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆம் ஆத்மி அறிவித்து இருந்தது.
இந்த போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'டெல்லியில் உள்ள டிடியு மார்க்கில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி பெறாததால் போராட்டக்காரர்களை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தடுப்புகள் போடப்பட்டு துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
டிடியு மார்க்கில் ஏற்கனவே 144 தடை உத்தரவு இருக்கிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள்' என்றார். இதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.