என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் எலுமிச்சை, சாம்பல் கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த டாக்டர்
- அமாவாசை தினத்தில் பெண்ணை பூஜைக்கு வருமாறு டாக்டர் அழைத்தார்.
- பூஜை அறையில் வைத்து பெண்ணை அமர வைத்து பல்வேறு மந்திரங்களை உச்சரித்தார்.
திருப்பதி:
சினிமாக்களில் வரும் காமெடி காட்சிகளில் டாக்டர்கள் பல்வேறு விதமாக பணம் பிடுங்குவதும் நூதனமாக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதை மிஞ்சும் வகையில் ஆந்திராவில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் வெறும் எலுமிச்சம்பழம் மற்றும் சாம்பலை கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத் எல்.பி.நகரில் ஆயுர்வேத டாக்டர் ஒருவர் தனியாக கிளினீக் நடத்தி வருகிறார்.
இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றார். தனக்கு தலைவலி மற்றும் நரம்பு பகுதிகளில் வலி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஆயுர்வேத சிகிச்சை பெற விரும்புவதாக டாக்டரை நாடினார். பெண்ணை பரிசோதித்த அந்த டாக்டர் மருந்துகளை பரிந்துரை செய்வதற்கு பதிலாக அந்த பெண்ணிடம் எலுமிச்சம் பழங்களையும் ஒரு சிறிய பையில் சாம்பலையும் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அமாவாசை தினத்தில் பெண்ணை பூஜைக்கு வருமாறு அழைத்தார். பூஜை அறையில் வைத்து பெண்ணை அமர வைத்து பல்வேறு மந்திரங்களை உச்சரித்தார்.
அப்போது பூஜை பொருட்கள் என கூறி வீட்டிற்கு வாங்க வேண்டிய மளிகை பொருட்களின் பட்டியலை அந்த பெண்ணிடம் கொடுத்தார்.
இவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு அந்த பெண்ணிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தை டாக்டர் பறித்துக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து அவரது உறவினர்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட டாக்டர் மீது இதுவரை எந்தவிதமான புகார்களும் வரவில்லை. எனவே பெண் கூறிய குற்றச்சாட்டுகள் சரிபார்க்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.