search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொடர் விலை உயர்வால் இந்தியாவில் தங்கத்தின் தேவை 17 சதவீதம் குறைந்தது
    X

    தொடர் விலை உயர்வால் இந்தியாவில் தங்கத்தின் தேவை 17 சதவீதம் குறைந்தது

    • உலக தங்க கவுன்சில் கருத்துப் படி, ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதம் குறைந்து 112.5 டன்களாக உள்ளது.
    • 2022-ம் ஆண்டின் இதே காலாண்டில் ஒட்டுமொத்த தங்கத்தின் தேவை 135.5 டன்களாக இருந்தது.

    புதுடெல்லி:

    தங்கம் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தை வாங்குவதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கத்தை அதிகளவு வாங்குவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாதான் உலகின் 2-வது பெரிய நாடாக உள்ளது.

    இந்தியாவின் தங்க இறக்குமதியில் சுவிட்சர்லாந்து பாதிப் பங்கைக் கொண்டிருந்தது. இது 16.3 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியா 34.6 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 28.2 பில்லியன் டாலர்களாக இருந்தது.

    நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவில் தங்கம் இறக்குமதி 1046.7 சதவீதம் அதிகரித்து 7.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து மொத்த இறக்குமதி 0.07 சதவீதம் குறைந்து 65.21 பில்லியன் டாலர்களை எட்டியது. இருந்தபோதிலும், ஏற்றுமதியில் இந்தியாவின் முதன்மையான இறக்குமதியாளராக சீனா இருந்தது. அவர்களைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஐக்கிய அரபு அமீரகமும் வந்தன.

    முந்தைய நிதியாண்டில் இந்தியாவின் இறக்குமதியாளர்களின் முதல் 10 பட்டியலில் ஜெர்மனியும் நுழைந்தது. உலகளாவிய காரணிகள், அமெரிக்க வட்டி விகித உயர்வுகள், டாலரின் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை தங்கத்தின் விலையை அதிகரிக்க செய்துள்ளன. தங்கம் விலை கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 19 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இந்த சூழலில் உலக தங்க கவுன்சில் கருத்துப் படி, ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதம் குறைந்து 112.5 டன்களாக உள்ளது. 2022-ம் ஆண்டின் இதே காலாண்டில் ஒட்டுமொத்த தங்கத்தின் தேவை 135.5 டன்களாக இருந்தது.

    இது தொடர்பாக உலக கவுன்சிலின் மண்டல தலைமை நிர்வாக அதிகாரி சோமசுந்தரம் கூறியதாவது:-

    2010 ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா காலத்தை தவிர்த்து கியூ 1 தங்க நகைகளின் தேவை 100 டன்களுக்குக் கீழே சரிந்தது இது நான்காவது முறையாகும். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்தியாவில் தங்கத்தின் தேவை மார்ச் காலாண்டில் 17 சதவீதம் குறைந்துள்ளது.

    இது கடந்த 10 காலாண்டுகளில் மிகக்குறைவு என்று தெரிவித்துள்ளது. ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டுகளில் கூட இந்திய தங்கத்தின் தேவை குறைந்த விலையில் இருக்கும் என்று தங்கத் தொழிலுக்கான சந்தை மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் தங்கம் வாங்குவது குறைந்தால், உலக விலை ஏற்றத்தை குறைக்கலாம். ஏனெனில் இந்தியா உலகின் 2-வது பெரிய தங்க நுகர்வோர் ஆக உள்ளது. தங்கம் இறக்குமதி குறைவது இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும்.

    2022-ம் ஆண்டி 774.1 டன்னாக இருந்த இந்தியாவின் தங்கத்தின் தேவை இந்த ஆண்டில் 750 முதல் 800 டன்னாக இருக்கும். இந்தியாவில், கிராமப்புறங்களில், நீண்ட காலமாக நகைகள் செல்வத்தின் பாரம்பரியக் களஞ்சியமாக இருந்து, நாட்டின் தங்கத் தேவையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது.

    இந்தியாவில் சமீபத்தில் அட்சய திரிதியையின் போது தங்கத்தின் தேவை கடந்த ஆண்டை விட குறைவாகவே இருந்தது. தங்கம் விலை உயர்வால் சிலர் தங்களுடைய பழைய நகைகள் மற்றும் நாணயங்களை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பழைய தங்கம் விற்பனையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. இது மார்ச் காலாண்டில், ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 25 சதவீதம் உயர்ந்து 34.8 டன்னாக உயர்ந்துள்ளது, இது கடந்த 10 காலாண்டுகளில் மிக அதிகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×