என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மூணாறு அருகே விபத்து- பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி
BySuresh K Jangir12 Sept 2022 12:12 PM IST
- பஸ் மூணாறை அடுத்த நேரியமங்கலம், சக்குறிச்சி வளைவு அருகே சென்ற போது திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
- பஸ்சில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மூணாறுக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் சென்றது.
பஸ்சில் ஏராளமான தொழிலாளிகள் இருந்தனர். பஸ் மூணாறை அடுத்த நேரியமங்கலம், சக்குறிச்சி வளைவு அருகே சென்ற போது திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் அடிமாலி பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 20 பேர் காயம் அடைந்தனர். இதில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பஸ்சின் டயர் வெடித்ததால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×