search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம்
    X

    பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம்

    • மூன்றாவது நாளாக பயங்கரவாதிகள் தேடு பணி நடந்து வருகிறது.
    • பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் செக்டார் பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள்-பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து பாரமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

    இதைதொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் ரோமியோ படை மற்றும் எஸ்ஓஜி போலீஸ் ஆகியோர் சேர்ந்து பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் செக்டார் பகுதியில் உள்ள பத்தனாதீரின் மலைப்பாங்கான வனப்பகுதியில் மூன்றாவது நாளாக பயங்கரவாதிகளை தேடு பணி நடந்து வருகிறது.

    வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்க கூட்டு நடவடிக்கை தொடர்கிறது. அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் செக்டார் பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையால் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×