search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணீஷ் சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்கிறது- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    X

    மணீஷ் சிசோடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்கிறது- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

    • மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது.
    • சிசோடியாவுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது.

    இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்வதாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புடைய சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.52 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பொய் சொல்கிறது. சிசோடியாவுக்கு எதிரான ஆதாரம் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×