என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சாலையை கடக்க போக்குவரத்தை நிறுத்தி மலைப்பாம்புக்கு உதவிய வாலிபர்
- மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.
- சில வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் பாம்புகளை கண்டால் துரத்தி அடிப்பவர்களுக்கு மத்தியில், ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க வாலிபர் ஒருவர் போக்குவரத்தை நிறுத்தி உதவிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியபிரதேச மாநிலத்தில் நர்மதா புரத்தில் நெடுஞ்சாலையில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. ஆனால் அந்த பாம்பு சாலையில் நகர முடியாமல் 10 நிமிடங்களுக்கு மேலாக திணறுவதை அவ்வழியாக சென்ற வாலிபர் பார்த்தார். உடனடியாக அவர் தனது வாகனத்தை நிறுத்தியதோடு பாம்பின் மீது மற்ற வாகனங்கள் ஏறி விடாமல் இருப்பதற்காக அந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி உள்ளார்.
பின்னர் அந்த பாம்பு சாலையை கடக்கும் வகையில் கை தட்டி உள்ளார். அவரின் கை தட்டலை கேட்டு பாம்பு மெதுவாக சாலையை கடந்து செல்கிறது. இதை சில வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிய நிலையில் வாலிபரை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.