search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த உத்தரபிரதேச வாலிபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி
    X

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த உத்தரபிரதேச வாலிபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி

    • குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளா வருவோர் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக விமான நிலையங்களில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • வெளிநாடுகளில் இருந்து வருவோர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய் இந்தியாவின் கேரளாவிலும் பரவி வருகிறது.

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு முதன்முதலாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.

    இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து மேலும் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்களையும் சேர்த்து குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    இதையடுத்து குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளா வருவோர் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக விமான நிலையங்களில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெளிநாடுகளில் இருந்து வருவோர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து கேரளாவின் நெடும்பாசசேரி விமான நிலையத்தில் வந்து இறங்கிய வாலிபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த அந்த வாலிபர் உடனடியாக ஆலுவாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.

    Next Story
    ×