என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மதுரை எய்ம்ஸ் தாமதத்துக்கு தமிழக அரசே காரணம்- நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
- மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
- மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதால் தமிழக அரசுக்கு நிதி சுமையும் ஏற்படாது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
தமிழகத்தை பற்றி பேச நிறைய இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மதிப்பீடு ரூ.1900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம். மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள். மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதால் தமிழக அரசுக்கு நிதி சுமையும் ஏற்படாது. மற்ற மாநிலங்களைவிட மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் கல்லூரியில் கூடுதல் படுக்கை வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்தின் கடன் மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கட்டித் தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருந்த போதே அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.