search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மோடி ஆட்சியில் கல்வித்துறை மாபியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
    X

    மோடி ஆட்சியில் கல்வித்துறை மாபியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

    • பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வைகூட நியாயமான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது.
    • இன்றைக்கு இளைஞர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய தடையாக பா.ஜ.க. அரசு மாறி உள்ளது.

    புதுடெல்லி:

    நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் வினாத்தாள் கசிவு, முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைப்பு ஆகியவை தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முதுநிலை நீட் தேர்வு, நெட் தேர்வு ஆகியவை ரத்தாகி உள்ளது. இன்று நாட்டின் மிகப்பெரிய தேர்வுகளின் நிலை இதுதான்.

    பாரதிய ஜனதா ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாபியா மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் வீணடிக்கும் வகையில் இது அமைந்து உள்ளது.

    அரசியல் பிடிவாதம் நமது கல்விமுறையின் அடையாளமாக மாறி உள்ளது. பா.ஜ.க. அரசால் ஒரு தேர்வைகூட நியாயமான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இன்றைக்கு இளைஞர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய தடையாக பா.ஜ.க. அரசு மாறி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×