search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ரூ.665 கோடி மதுபானங்கள் விற்பனை
    X

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ரூ.665 கோடி மதுபானங்கள் விற்பனை

    • கேரள மாநிலத்தில் அரசு மதுபான கழகம் சார்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ஓணம் திருநாளுக்கு முந்தைய நாளான 28-ந்தேதி ஒரு நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் ரூ.116 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஜாதி, மத, இன பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் இந்த பண்டிகையால் மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

    இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கடந்த 20-ந்தேதி தொடங்கி கொண்டாடப்பட்டு வந்தது. நேற்று முன்தினம்(29-ந்தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மதுபானங்கள் விற்பனை அதிகளவில் நடந்துள்ளது.

    கேரள மாநிலத்தில் அரசு மதுபான கழகம் சார்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 320-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள், 500-க்கும் மேற்பட்ட ஓட்டல் பார்களில் உள்நாட்டு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கடைகள் மற்றும் பார்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி இருக்கிறது. ஓணம் பண்டிகை தொடங்கிய கடந்த 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 8 நாட்களில் மாநிலம் முழுவதும் ரூ.665கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    கடந்த ஆண்டு(2022) இதேபோல் 8நாளில் ரூ.624 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.41 கோடி அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    ஓணம் திருநாளுக்கு முந்தைய நாளான 28-ந்தேதி ஒரு நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் ரூ.116 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது. அன்றைய தினம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ.1.06 கோடிக்கும், கொல்லம் ஆசிராமம் பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ.1.01 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    அதேபோன்று சங்கனாச்சேரியில் உள்ள ஒரு கடையில் ரூ.95.78கோடிக்கும், சேர்தலாவில் உள்ள ஒரு கடையில் ரூ.93.76 கோடிக்கும், பையனூரில் உள்ள ஒரு கடையில் ரூ.91.67 கோடிக்கும் , சாலக்குடியில் உள்ள ஒரு கடையில் ரூ.88.59 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    Next Story
    ×