search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாரத மாதாவை அவமதித்தால்.. கங்கனா தாக்கப்பட்டது குறித்து சஞ்சய் ராவத் சொல்வது இதுதான்
    X

    பாரத மாதாவை அவமதித்தால்.. கங்கனா தாக்கப்பட்டது குறித்து சஞ்சய் ராவத் சொல்வது இதுதான்

    • விவசாயிகள் போராட்டத்தில் அந்த பெண் காவலரின் தாய் பங்கேற்றிருந்தால், தனது தாயை தீவிரவாதி என்று சொன்னவர் மீது அந்த பெண்ணுக்கு கோபம் வருவது இயல்பே.
    • ஒரு எம்.பி தாக்கப்படுவது சரியல்ல தான். ஆனால் விவசாயிகளும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராடியது தெரிந்தததே. இதற்கிடையில் பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது இந்த இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிராவில் (உத்தவ் தாக்கரே) சிவா சேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் அவர் பேசுகையில், சிலர் வாக்குகளை தருவார்கள், சிலர் அடியைத் தருவார்கள், இந்த விஷயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஒருவேளை விவசாயிகள் போராட்டத்தில் அந்த பெண் காவலரின் தாய் பங்கேற்றிருந்தால், தனது தாயை தீவிரவாதி என்று சொன்னவர் மீது அந்த பெண்ணுக்கு கோபம் வருவது இயல்பே.

    இந்த விவகாரத்தில் "இந்தியா சட்டத்தின் ஆட்சி நடக்கும் தேசம் என்றும் சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடி சொல்லக்கூடும். ஆனால் தங்களது உரிமைகளுக்காக போராடிய விவசாயிகளும் இந்த தேசத்தின் பிள்ளைகள் தான். ஒவ்வொரு பெண்ணும் பாரத மாதா தான். அந்த வகையில் பாரத மாதாவை ஒருவர் தீவிரவாதி என்று கூறுவாராயின் அதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். ஆனாலும் கங்கானாவுக்காக நான் வருந்துகிறேன். அவர் இப்போது எம்.பி. ஒரு எம்.பி தாக்கப்படுவது சரியல்ல தான். ஆனால் விவசாயிகளும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    Next Story
    ×