search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வறுக்கும் கருவியில் டீ தயாரித்த இளம்பெண்- வீடியோ வைரல்
    X

    வறுக்கும் கருவியில் டீ தயாரித்த இளம்பெண்- வீடியோ வைரல்

    • வீட்டில் ஒருவர் மட்டும் இருக்கும்போது, ஒரு டம்ளர் அளவில் ஒரே ஒரு டீ தயாரிக்க பலருக்கு சலிப்பாக இருக்கும்.
    • வீடியோ வைரலானதுடன், விவாதத்தையும் தூண்டி உள்ளது.

    எண்ணெய் இல்லாமல் உணவுப் பண்டங்களை மொறுமொறுப்பாக வறுத்து எடுக்க ஏர் பிரையர் எனும் எலக்ட்ரானிக் கருவியை இல்லத்தரசிகள் பயன்படுத்துகிறார்கள். உருளை கிழங்கு சிப்ஸ், பிரெஞ்ச்பிரை, பிரெட் டோஸ்ட் போன்றவற்றை இதில் விரைவாக சமைத்து முடிக்கலாம்.

    ஆனால் இதில் டீ, காபி போட முடியுமா? என்பதை இதை தயாரிக்கும் நிறுவனங்கள் கூட யோசித்து இருக்காது. இப்போது எதையும் வித்தியாசமாக யோசிக்கும் இணைய கில்லாடிகள் பலர் சமூக வலைத்தளத்தில் பெருகி வருகிறார்கள். அப்படி ஒரு பெண், நேரடியாக பிளாஸ்டிக் டம்ளரை பிரையர் கருவியில் வைத்து டீ போட்டு அசத்தியிருக்கிறார். அதுபற்றிய வீடியோ காட்சிகள் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

    வீட்டில் ஒருவர் மட்டும் இருக்கும்போது, ஒரு டம்ளர் அளவில் ஒரே ஒரு டீ தயாரிக்க பலருக்கு சலிப்பாக இருக்கும். ஆனால் டீ குடித்தால்தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்ற நினைப்பும் இருக்கும். அந்த ரகத்தை சேர்ந்த இந்த இளம்பெண், டீ கோப்பையில் நேரடியாக டீ தூளையும், அரை கப் தண்ணீரையும் சேர்த்து பிரையரில் வைக்கிறார். உள்ளே சில பிரெஞ்ச் பிரை கிடக்கிறது. அதன் அருகிலேயே டம்ளரை வைத்து, 6 நிமிட நேரம் வைத்து பிரையர் கருவியை இயக்குகிறார். பின்னர், அதில் சிறிது பால் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கிறார். சிறிது நேரத்தில் சூடான டீயை எடுத்து பருகுகிறார்.

    இந்த வீடியோ வைரலானதுடன், விவாதத்தையும் தூண்டி உள்ளது.




    Next Story
    ×