என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
குடிபோதையில் சிறுவன் ஓட்டிவந்த கார் மோதி கருவில் இருந்த 9 மாத சிசு மரணம்
Byமாலை மலர்25 July 2024 1:54 PM IST
- ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
- விபத்தில் காயமடைந்த தீபிகா தனது குழந்தையை பிறக்கும் முன்பே இழந்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் குடிபோதையில் சிறுவன் ஓட்டி வந்த கார் மோதியதில் 9 மாத கர்ப்பிணியின் குழந்தை பிறக்கும் முன்பே இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். ரவி தனது மனைவி மற்றும் 6 வயது குழந்தையுடன் பைக்கில் வந்துள்ளார். அப்போது குடிபோதையில் சிறுவர்கள் ஓட்டி வந்த கார் அந்த பைக்கின் மீது மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த தீபிகா தனது குழந்தையை பிறக்கும் முன்பே இழந்துள்ளார். ரவி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். ஆனால் அவர்களின் 6 வயது மகள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×