என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிபோர்ஜோய் புயல் பாதிப்பு- ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு
- பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது.
- சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன.
அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அப்போது கடலில் பல மீட்டர் உயரத்திற்கு அலைகளும் எழுந்தது. அதோடு கன மழையும் பெய்தது.
பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.