என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக அதானி மீது குற்றச்சாட்டு: அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட்
- சோலார் எனர்ஜி சப்ளை ஒப்பந்தத்தை பெற அதிகாரிகளுக்கு லஞ்சம்.
- இதை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்ததாக குற்றச்சாட்டு.
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்ததை முதலீட்டாளர்களிடம் தெரிவிக்காமல் மறைத்து ஏமாற்றியதாக அமெரிக்கா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சோலார் எனர்ஜி சப்ளை ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேல் லஞ்சம் கொடுக்க முன்வந்ததை தெரிவிக்காமல் மறைத்ததன் மூலம் இத்திட்டத்தில் பல மில்லியன் டாலர்கள் முதலீடு செய்த முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷன் அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றுதல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முன்வருதல் குற்றச்சாட்டை அதானி மீது வைத்துள்ளது.
கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிர்வாகி), சிரில் கபாடினெஸ் (executive of Azure Power Global Ltd) உள்ளிட்ட ஏழு மீது குற்றம்சாட்டியுள்ளது.
அதானி கிரீன் அமெரிக்க முதலீட்டாளர்களிடம்இருந்து 175 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு பெற்றதாக தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.