search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வந்தே பாரத் ரெயிலின் புதிய வண்ணம் தேசியக் கொடியால் ஈர்க்கப்பட்டது- ரெயில்வே அமைச்சர்
    X

    வந்தே பாரத் ரெயிலின் புதிய வண்ணம் தேசியக் கொடியால் ஈர்க்கப்பட்டது- ரெயில்வே அமைச்சர்

    • நாடு முழுவதும் 26 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் ஆய்வு செய்தார்.

    இந்திய ரெயில்வே துறையை மேம்படுத்த மத்திய ரெயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் புதுமையாக அதிநவீன வசதிகள் கொண்ட வேகமாக செல்லும் வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    முற்றிலும் குளிர்சாதன வசதிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி- வாரணாசி இடையே தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்தே பாரத் ரெயில்கள் விடப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 26 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் மேலும் பல வந்தே பாரத் ரெயில்கள் விட திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த ரெயில் பெட்டிகள் அமைத்தும் உலக புகழ் பெற்ற சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    வந்தேபாரத் ரெயிலின் அடையாளமாக அதன் வண்ணம் வெள்ளை மற்றும் நீல கலரில் இருந்து வருகிறது. இதனை ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிற வண்ணமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, தெற்கு ரெயில்வேயில் பாதுகாப்பு நடவடிக்கைகள், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மேம்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், "உள்நாட்டு ரெயிலின் 28-வது ரெயிலின் புதிய வண்ணம் இந்திய மூவர்ணத்தால் ஈர்க்கப்பட்டது" என்று கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    இது மேக் இன் இந்தியா.. அதாவது இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது. நம் சொந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது.

    எனவே, வந்தே பாரத் செயல்பாட்டின் போது, ஏசிகள், கழிப்பறைகள் போன்றவற்றைப் பற்றி களப் பிரிவுகளிடமிருந்து நாம் என்ன கருத்துக்களைப் பெற்றாலும், அந்த மேம்பாடுகள் அனைத்தும் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

    நாம் பணிபுரியும் ஒரு புதிய பாதுகாப்பு அம்சம், 'ஆன்டி க்ளைமர்ஸ்' அல்லது ஆண்டி-கிளைம்பிங் சாதனங்களும் இன்று மதிப்பாய்வு செய்யப்பட்டன. இவை அனைத்து வந்தே பாரத் மற்றும் பிற ரெயில்களிலும் நிலையான அம்சங்களாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×