என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வயநாடு, செலக்கரா சட்டசபை தொகுதியிலும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- தொகுதி முழுவதும் மொத்தம் 1,354 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
- காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அங்கு காங்கிரஸ் கட்சி யின் சார்பில் ராகுல் காந்தி யின் சகோதரி பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. இதற்காக தொகுதி முழுவதும் மொத்தம் 1,354 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஒரு சில வாக்குச்சாவடிகளை தவிர, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வாக்காளர்கள் வந்து காத்து நின்றதை காண முடிந்தது. ஏராளமான இளம் வாக்காளர்கள் மற்றும் பெண்கள் காலையிலேயே ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.
நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். ஓட்டுப்பதிவு தொடங்கிய ஒன்றரை மணி நேரத்தில் வயநாடு மக்களவை தொகுதியில் 6.97 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியிருந்தது.
காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கல்பெட்டாவில் உள்ள ஒரு பள்ளியில் செயல்பட்ட வாக்குச்சாவடிக்கு இன்று காலை வந்து ஓட்டுப் பதிவை பார்வையிட்டார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களும் சில வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்கள்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
வயநாடு மக்களவை தொகுதியில் கடந்த தேர்த லில் ராகுல்காந்தி 6லட்சத்து 47 ஆயிரத்து 445 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் அன்னி ராஜா 2 லட்சத்து 83 ஆயிரத்து 23 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் சுரேந்திரன் 1 லட்சத்து 41 ஆயிரத்து 45 வாக்குகளும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று செலக்கரா சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியிலும், பாலக்காடு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆகினர்.
இதனால் அவர்கள் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக அந்த இரு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அந்த தொகுதிகளுக்கும் வயநாடு மக்களவை தொகுதியுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பாலக்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 20-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. செலக்கரா சட்டசபை தொகுதிக்கு மட்டும் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. அங்கும் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.
இடைத் தேர்தல் காரணமாக செலக்கரா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று பொதுவிடுமுறை விடப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்