search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
    X

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

    • காங்கிரஸ் வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.
    • காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், இந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அந்த தொகுதியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் இன்று உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். 5,25,38,105 வாக்காளர்கள் உள்ளனர். 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 199 தொகுதிகளிலும் 51,507 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 70 ஆயிரம் ராஜஸ்தான் போலீசார், 18 அயிரம் ராஜஸ்தான் ஹோம் கார்ட்ஸ், 2 ஆயிரம் ராஜஸ்தான் பார்டர் ஹோம் கார்ட்ஸ், மற்ற மாநிலங்களில் இருந்து 15 ஆயிரம் ஹோம் கார்ட்ஸ் அடங்குவர். மேலும், 120 ஆர்ஏசி கம்பெனிகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×