என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தேர்தல் ஆணையம் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்போம்: காங்கிரஸ் எச்சரிக்கை
அரியானா சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியது . இதை விசாரித்த தேர்தல் ஆணையம், காங்கிரஸ் அளித்த புகாரை நிராகரித்தது. மேலும், ஆணையம் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டு எண்ணிக்கை நடைமுறை மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதால், குழப்பமும், பொது அமைதியின்மையும் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு பதில் கடிதம் ஒன்றை காங்கிரஸ் கட்சி அனுப்பியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட், அஜய் மக்கான் உள்ளிட்ட 9 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள அந்தக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: -
குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினோம். தேர்தல் ஆணையம் மற்றும் ஆணையர்களை மதிக்கிறோம். ஆனால், தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளிக்கும் பதில்கள் தாழ்ந்த தொனியில் உள்ளது.
தேர்தல் ஆணையம் தனக்கு தானே நற்சான்றிதழ் அளித்தது ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் உள்ள தொனியை எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம். அது எங்களின் தலைவர்களை விமர்சிப்பதுபோல் உள்ளது. மோசமான தொனியில் உள்ளது. முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள். எந்த விமர்சனத்தையும் செய்யக்கூடாது. கட்சியை தாக்கக்கூடாது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற கருத்துகளை நீக்குவதற்கு சட்ட ரீதியிலான நடவடிக்கையை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறியுள்ளனர்.