search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வங்காளதேசத்தில் நடந்தது இந்தியாவிலும்? ஜாக்கிரதை! - காங்கிரசார் கருத்துக்கு ஜகதீப் தன்கர் கண்டனம்
    X

    வங்காளதேசத்தில் நடந்தது இந்தியாவிலும்? ஜாக்கிரதை! - காங்கிரசார் கருத்துக்கு ஜகதீப் தன்கர் கண்டனம்

    • காங்கிரசை சேர்ந்த மணி சங்கர் ஐயருக்கும், வங்காளதேசத்துடன் இந்தியாவை ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்
    • அண்டை நாட்டில் நடப்பது நமது பாரத் - திலும் நடக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது.

    வங்காளதேசத்தில் நடந்ததது இந்தியாவிலும் நடக்கலாம் என்று கருத்துக்கு ஜெகதீப் தன்கர் கண்டனம்

    வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய போராட்டம், ஷேக் ஹசீனா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரானதாக மாறியது. இது ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்தது. மாளிகையைப் போராட்டக்காரர்கள் சூறையாடிய நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

    வங்காளதேச ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைத்துள்ளது. இந்நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், இப்போது பார்ப்பதற்கு எல்லாம் சாதாரணமாக இருப்பது போல் உள்ளது. ஆனால் வங்காள தேசத்தில் தற்போது நடந்து வருவது இந்தியாவிலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயருக்கும், வங்காளதேசத்துடன் இந்தியாவை ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவனந்தபுர எம் .பி சசி தரூர், வங்காள தேசத்தில் கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் வெளிப்படைத் தன்மை இல்லாததைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

    தற்போது இந்த கருத்துக்கள் குறித்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பவள விழாவில் பேசிய ஜககீத் தன்கர், ஜாக்கிரதையாக இருங்கள், அண்டை நாட்டில் நடப்பது நமது பாரத் - திலும் நடக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது.

    இந்த நாட்டின் குடிமகனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து கொண்டு இவ்வாறு பேச முடிகிறது என்று கேள்வியெழுப்பினார். மேலும், தேச விரோத சக்திகள் அரசியலமைப்பைப் பயன்படுத்தி நாசகர வேலைகளை நியாயப்படுத்தி வருகிறது என்று எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×