என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
விமான நிலையத்தில் தொலைந்து போன பெண்ணின் வைர மோதிரம்
- மத்திய தொழில்பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகாங்ஷாவின் பகிர்வுக்கு பதில் அளித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளனர்.
- பதிவு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலானது.
தொலை தூரங்களுக்கு பயணம் செல்லும் போது எதிர்பாராதவிதமாக தங்களின் விலை உயர்ந்த பொருட்கள் தொலைந்து போனால் அந்த குடும்பத்தினருக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும். அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஆகாங்ஷா சிங் என்பவர் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வைர மோதிரம் தொலைந்து போய் விட்டது. இதனால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
இதுகுறித்து அவர் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் தேடிப்பார்த்தனர். அப்போது அந்த பெண் தொலைத்த வைர மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆகாங்ஷா சிங் தனது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை விவரித்து பதிவிட்டுள்ளார். அதில், கெம்பேகவுடா விமான நிலையத்தில் எனது வைர மோதிரத்தை இழந்தேன். ஆனால் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளான ராஜேஷ் சிங் மற்றும் வினய்குமார் ராய் ஆகியோரின் உதவியுடன் எனது மோதிரத்தை கண்டுபிடிக்க முடிந்தது. அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் உதவும் இயல்புக்கு நன்றி என பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலானது.
இந்நிலையில் மத்திய தொழில்பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகாங்ஷாவின் பகிர்வுக்கு பதில் அளித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளனர். அதில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு அன்பான வாழ்த்துகள். உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் உறுதிப்படுத்துவதற்கு சி.ஐ.எஸ்.எப். எப்போதும் உதவியாக இருக்கும். உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி என கூறியுள்ளனர்.