என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ரூ.8 கோடி தர மறுத்த கணவரை தீர்த்துக்கட்டி சடலத்துடன் 800 கி.மீ. சுற்றிய மனைவி- சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்
- என்ஜினியரிங் படித்து முடித்த அவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
- நிஹாரிகா மற்றும் அவருடைய கள்ளக்காதலர்களை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், புவனகிரியை சேர்ந்தவர் நிஹாரிகா (வயது 29). இவருடைய 16-வது வயதில் தந்தை இறந்துவிட்டார்.
அவருடைய தாயார் மறுமணம் செய்து கொண்டார். தந்தை இழப்பு, தாய் மறுமணம் என மனம் உடைந்த நிஹாரிகா படிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். என்ஜினியரிங் படித்து முடித்த அவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரையும், பின்னர் அரியானாவை சேர்ந்த மற்றொருவரையும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றார்.
நிஹாரிகவின் மோசடி குறித்து 2-வது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நிஹாரிகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் இருந்த சக பெண் கைதியுடன் நிஹாரிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஜெயிலில் இருந்து வெளியே வந்தபோது ஜெயிலில் பழக்கமான கைதியின் மகன் ராணா என்பவருடன் நிஹாரிகாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் பெங்களூரு சென்றபோது அங்குள்ள கால்நடை டாக்டர் நிகில் ரெட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆன்லைன் திருமண விளம்பரம் மூலம் ஐதராபாத் துகாரகேட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் குமாருடன் நிஹாரிகாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
நிஹாரிகா தான் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்வதாக அவரிடம் தெரிவித்தார்.
ரமேஷ் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவி மகளை தவிக்கவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு ரமேஷ் குமார் நிஹாரிகாவை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவரும் காட்கேசர் ,போச்சவரத்தில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். ரமேஷ் குமார் நிஹாரிகாவுக்கு ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வழங்கினார். கேட்ட போதெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தார். இதனால் நிஹாரிகா ஆடம்பரமான வாழ்க்கை வாழ தொடங்கினார்.
நிஹாரிகா அடிக்கடி பெங்களூர் சென்று கள்ளக்காதலர்களை சந்தித்து வந்தார். ரமேஷ் குமாருக்கு அவர் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நிஹாரிகா ரமேஷ் குமாரிடம் ரூ.8 கோடி கேட்டார். மிகப்பெரிய தொகையாக இருப்பதாக நினைத்த ரமேஷ் குமார் பணம் தர மறுத்தார். இது நிஹாரிகாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக அவருடைய கள்ளக்காதலன் ராணாவை வரவழைத்தார். சம்பவத்தன்று இரவு ரமேஷ் குமார் வீட்டில் மது குடித்துவிட்டு மயங்கியபடி கிடந்தார்.
அந்த நேரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி ரமேஷ் குமாரை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள கள்ளக்காதலன் நிகில் ரெட்டிக்கு நிஹாரிகா தகவல் தெரிவித்தார்.
பின்னர் ரமேஷ் குமார் பிணத்தை காரில் ஏற்றிக்கொண்டு 800 கிலோமீட்டர் பயணம் செய்தனர். கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம், சுண்டிகுப்பாவில் உள்ள காபி தோட்டத்திற்கு சென்றனர். அங்கு ரமேஷ் குமார் உடலை துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பாதி எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் பிணத்துடன் சென்ற கார் பதிவு எண் பதிவாகி இருந்தது. அதன் மூலம் நிஹாரிகா மற்றும் அவருடைய கள்ளக்காதலர்களை போலீசார் கைது செய்தனர்.
ரமேஷ் குமார் பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க அவரை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் நிஹாரிகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து குடகு போலீசார் கூறுகையில், " உடல் பாகங்கள் போர்வையால் சுற்றி எரிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதால் கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள 500 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் நள்ளிவு 12 மணிக்கு காப்பி தோட்டத்திற்குள் சென்ற கார் பதிவு எண் தெளிவாகத் தெரிந்தது. அதன்மூலம் விசாரணையை தொடங்கினோம்.
அப்போது கார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருடையது என தெரியவந்தது. மேலும் அவரைக் காணவில்லை என அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சந்தேகம் ஏற்பட்டதால் நிஹாரிகாவிடம் விசாரித்தோம். இதில் அனைத்து உண்மைகளும் வெளிவந்தது" என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்