search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைவில் இந்தியா வரும் மேம்படுத்தப்பட்ட வேகன் ஆர்
    X

    விரைவில் இந்தியா வரும் மேம்படுத்தப்பட்ட வேகன் ஆர்

    மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் அடுத்த தலைமுறை வேகன் ஆர் மாடலை இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #MarutiSuzuki



    மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் அடுத்த தலைமுறை வேகன் ஆர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி புதிய வேகன் ஆர் 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    புதிய தலைமுறை வேகன் ஆர் ஹேட்ச்பேக் ஏற்கனவே ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானில் வேகன் ஆர் மாடல் 660சிசி இன்ஜின் கொண்டிருக்கிறது. 

    சர்வதேச சந்தையில் புதிய வேகன் ஆர் ஆறாவது தலைமுறை மாடலாக இறுக்கும். எனினும், இந்தியாவில் இது நான்காவது தலைமுறை மாடலாக இருக்கும். இந்தியாவில் மூன்று மற்றும் ஐந்தாவது தலைமுறை ஹேட்ச்பேக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படவில்லை.



    இந்தியாவில் தற்சமயம் வெளியாக இருக்கும் வேகன் ஆர் மாடலில் 1.0 லிட்டர் K10 சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் மாருதி ஆல்டோ மற்றும் செலரியோ மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் விற்பனையாகும் மாடல் CNG வேரியன்ட் கிடைக்கிறது.

    புதிய கார் வெளியீடு குறித்து மாருதி சுசுகி எவ்வித தகவலையும் வழங்கவில்லை, எனினும் இந்த மாடல் CNG வேரியன்ட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடல் பெட்ரோல் இன்ஜின் மட்டும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×