search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • இன்று முதல் போக்குவரத்து தொடங்கியது
    • அவ்வழியே போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    சென்னை-நாகப்பட்டி னம் 4 வழி சாலை பணிகள் எம்.என் குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்த 4 வழி சாலையில் 5 பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி திருவண்டார் கோவில் மேம்பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல அச்சமடைந்தனர். மேலும் அவ்வழியே போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

    இதனால் திருபுவனை, கண்ட மங்கலம் பகுதியில் ஒரு வழி சாலை அமைக்கப் பட்டு வாகனங்கள் சென்று வந்தது. மேலும் கண்ட மங்கலம் மேம்பாலத்தின் தெற்கு புறமாக செல்லும் சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருவாண்டார்கோயில், திருபுவனை வழியாக ஒரு வழி பாதையில் கடந்த 8 நாட்களாக சென்று வந்த ன. இதனால் அப்பகுதிகளில் காலை, மாலையும் கடுமை யான போக்குவரத்து நெரிச லும் வாகன விபத்துகளும் நடந்தது.

    தற்போது 8 நாட்க ளுக்குப் பிறகு மேம்பாலத்தில் விரிசல் சீரமைக்கப்பட்டது. இன்று காலை அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் அனைத்து வாக னங்களும் செல்கின்றன.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் பெருமிதம்
    • உலக மீனவர் தின வாழ்த்து

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள உலக மீனவர் தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வாழ் மீனவ சகோதார, சகோதரிகள் அனைவருக்கும் எனது சார்பிலும், புதுவை அரசின் மீன்வளத்துறை சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மக்கள் முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மீனவ சமுதாயத்திற்கு நலத்திட்ட உதவிகள் வந்து சேர்வதை அனைவரும் அறிவர். ஓய்வூதியத்தொகை உயர்த்தப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம், டீசல் மானியம் உயர்வு, தடைக்கால மழைக்கால நிதி யுதவிகள் காலம்தாழ்த்தாமல் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி திட்டத்தின் கீழ் காலாப்பட்டு, நல்லவாடு, தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக விரிவாக்கம் என ரூ.100 கோடியில் திட்டம் நிறைவேற்றப்பட்டு டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யும் நிலையில் உள்ளது.

    டிசம்பர் இறுதிக்குள் உள்கட்டமைப்பு வசதிகக்கான வேலைகள் தொடங்கப்படும். தூண்டில் முள் வளைவு அமைக்கும் திட்ட அறிக்கையும் இறுதிவடிவம் பெற்றுள்ளது.

    விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. காலாப்பட்டு கடற்கரையோர கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க கடற்கரைகளில் கல் கொட்டும் பணி ரூ.18 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.6 கோடி வேலை நடந்து வருகிறது.

    மீனவ சமுதாய மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் நாட்டில் முன் மாதிரியாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

    இந்த நல்லாட்சியில் மீனவ சமுதாய மக்கள் அனைவருக்கும் சமூக நீதியிலும், பொருளாதார ரீதியிலும் உயர அனை வருக்கும் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து தாக்கி கடத்தி சென்றனர்.
    • செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன் மாலிக் (வயது 26). இவர் அரியாங்குப்பம் பகுதியில் தங்கி அங்குள்ள டைல்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 18-ந் தேதி புதுவை கடலூர் சாலையில் வேலை முடித்துவிட்டு நடந்து வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து தாக்கி கடத்தி சென்றனர்.

    மணவெளி சாராயக்கடை யில் அருகே உள்ள பகுதியில் அழைத்துச் சென்ற அவர்கள் அங்கு 17 வயது கொண்ட 2 சிறுவர்களும் சேர்ந்து மாலிக்கை தாக்கி அவரிடம் இருந்து பணம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

    படுகாயம் அடைந்த மாலிக் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது உள்ளூர் வாலிபர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த தீபக் (வயது 20), வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மாதேஷ் (20) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

    • போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறியுள்ளது.
    • மறைமலை அடிகள் சாலையின் குறுக்காக எதிர்ப்புறத்தில் செல்கின்றனர்.

    புதுச்சேரி

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி மறைமலை அடிகள் சாலை மிகுந்த போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறியுள்ளது.

    மறைமலை அடிகள் சாலை புதிய பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள தென்னஞ்சாலை ரோடு, கென்னடி நகர், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கடலூர் சாலையிலிருந்து மறைமலை அடிகள் சாலையின் குறுக்காக எதிர்ப்புறத்தில் செல்கின்றனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து குழப்பம் ஏற்படுகிறது. மறுபுறத்தில் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை ஒட்டியுள்ள ஒத்தவாடை வீதி, முல்லை நகர் பகுதியை சேர்ந்த மக்கள் போலீஸ் நிலையத்தை ஒட்டி எதிர்புறம் வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க இப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நேரு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்டமாக தென்னஞ்சாலை வரை சுமார் 15 அடி அகலத்தில் சர்வீஸ் சாலை அமைப்பது என்றும், அதில் எதிர்ப்புறமாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர்.

    மறுபுறத்தில் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன் 10 அடி அகலத்தில் சர்வீஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உமாபதி, திருஞானம், போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் மாறன், மின்துறை செயற்பொறியாளர் கனியமுது, நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், அரசு துறை உதவி பொறியாளர்கள் இளநிலை பொறியாளர்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் பலர் உடனிருந்தனர். 

    • ரெயில் நிலையம் எதிரேஉள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை பாத்திமா மேல்நிலைப்பள்ளி முதல்வரும் கிறிஸ்தவ பாதிரியாருமாக இருப்பவர் மகிமை.

     சம்பவத்தன்று மதியம் இவர் ரெயில் நிலையம் எதிரேஉள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய சென்றார்.

    அப்போது ஆலய நுழைவு வாயிலில் பாதிரியார் மகிமை பைக்கில் சென்ற போது புதுவை பெட்டிகெனல் தெருவை சேர்ந்த சாமி என்ற ஆரோக்கிய சாமி என்பவர் வழிமறித்து தகாதவார்த்தை களால் திட்டினார்.

     மேலும் தனக்கு அரசியல் செல்வாக்கும் அடியாள் பலமும் உள்ளது. உன்னை என்றாவது ஒரு நாள் கொலை செய்து விடுவேன் என்று கூறியதோடு சிகரெட் புகையை பாதிரியார் மகிமையின் முகத்தில் ஊதினார். இதையடுத்து பாதிரியார் மகிமை ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவர்-பெற்றோர் நலசங்கம் வலியுறுத்தல்
    • கடந்த 2019-ம் ஆண்டு முதலாமாண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை 150-இடங்களிலிருந்து 180-ஆக உயர்த்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாநில மாணவர்-பெற்றோர் நலசங்கத் தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டு மே மாதத்தில் தேசிய மருத்துவ ஆணையம் புதுவை இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது இந்த மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்ததின் அடிப்படையில் பேராசியர்கள், உதவியாளர்கள், 80-க்கும் மேற்பட்டோர் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளை சரி செய்து உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதலாமாண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை 150-இடங்களிலிருந்து 180-ஆக உயர்த்தப்பட்டது.

    இதனை தேசிய மருத்துவக் கவுன்சில் எந்தவித ஆய்வும் செய்யாமல், அனுமதி அளித்தது.

    தற்போது தேசிய மருத்துவ ஆணையம் புதியதாக செலுத்தப்பட்ட விதி மற்றும் நெறிமுறைகள் அடிப்படையில் 2024-ஜனவரி மாத இறுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்ய உள்ளது.

    எனவே தற்போது 180-இளநிலை மருத்துவ இடங்களுக்கு உண்டான உதவியாளர்கள், ஊழியர்கள் பணி அமர்த்தியும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதுவை அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பாகூர் பாலச்சந்தர், செந்தில் வேல், பிரவின் குமார் உட்பட 25பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கின்றனர்.
    • கூடோ சங்க தலைவர் வளவன் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    புதுச்சேரி:

    குஜராத் மாநிலம் சூரத்தில் தேசிய அளவிலான கூடோ தற்காப்பு கலை போட்டி நாளை (புதன்கிழமை) தொடங்கி 29-ந் தேதிவரை நடைபெறுகிறது.

    இப்போட்டியில் புதுவை மாநில அணி சார்பில் புதுவை கூடோ சங்க பொதுச்செயலாளர் சந்தோஷ் குமார் தலைமையில் காலாப்பட்டு செல்வம், பாகூர் பாலச்சந்தர், செந்தில் வேல், பிரவின் குமார் உட்பட 25பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கின்றனர். இவர்களை வழிய அணுப்பும் விழா புதுவை பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி மாநில கூடோ சங்க தலைவர் வளவன் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ராஜ், மூத்த பயிற்சியாளர்கள் ஆறுமுகம், அசோக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன

    • பொதுப்பணி துறை தலைமை என்ஜினீயரிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
    • அப்துல்கலாம் அரசு குடியிருப்புகளை புதுப்பிக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் வீரசெல்வத்தை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து தொகுதி பணிகள் குறித்து மனு அளித்தார்.

    உப்பளம் தொகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.3.31 கோடி மதிப்பீட்டில் சாலை அமைப்பது, வாய்க்கால் கட்டுவது, அம்பேத்கார் சிலையை புதுப்பித்து பூங்காவை சீரமைப்பது போன்ற பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.

    அதுபோல் அப்துல்கலாம் அரசு குடியிருப்புகளை புதுப்பிக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். அதோடு கனிபாய் தோட்டம், வம்பா கீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில், வம்பா கீரப்பாளையம் தெப்பகுளம் வீதி, வம்பா கீரப்பாளையம் பழைய துறைமுகம் கலங்கரை விளக்கம் பின்புறம், உள்ளிட்ட 7 இடங்களில் ஹமாஸ் விளக்கு அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கென்னடி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக்கொண்ட தலைமை பொறியாளர் இப் பணிகளை விரைந்து முடித்துத் தருவதாக உறுதியளித்தார்.

    • உப்பளம், உருளையன்பேட்டை, ராஜ்பவன், முத்தியால் பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், கோரிமேடு வழியாக திண்டிவனம் சென்றது.
    • இளைஞரணி துணை அமைப்பாளர் உத்தமன் ஆகியோர் தலைமையிலும், கோரிமேடு எல்லையில் தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மாநில உரிமை மீட்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 15-ந் தேதி கன்னியாகுமரியில் தி.மு.க இளைஞர் அணி இருசக்கர வாகன பிரச்சார பேரணியை தொடங்கியது.

    பேரணி புதுவை மாநில எல்லையான மதகடிப்பட்டுக்கு வந்தது. அங்கு எதிர்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் அவைத்தலைவர்

    எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, செந்தில்குமார், சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், செந்தில்வேலன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் புதுவையில் வாகன பேரணி வில்லியனூர், மங்கலம், அரியாங்குப்பம், முதலியார் பேட்டை, உழவர்கரை, நெல்லித்தோப்பு, உப்பளம், உருளையன்பேட்டை, ராஜ்பவன், முத்தியால் பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், கோரிமேடு வழியாக திண்டிவனம் சென்றது.

    பேரணியில் இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர்கள் டாக்டர் நித்திஷ், தமிழ்பிரியன் ஆகியோர் தலைமையில் மரப்பாலம் சந்திப்பிலும், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், தொகுதி செயலாளர்கள் சவுரிராஜன், சிவக்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் உத்தமன் ஆகியோர் தலைமையிலும், கோரிமேடு எல்லையில் தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
    • புதுவையில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த மணப்பட்டில் பல்பொருள் சுற்றுலா மண்டலம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார்.தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா, பொதுப்பணித்துறைச் செயலர் மணிகண்டன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்ச்செல்வன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் சராசரியான செலவு திறன், புதுவையில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

    "சிங்கப்பூர் மாடல்" மற்றும் "கேரளா மாடல்" சுற்றுலா குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கவர்னர் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகள் வருமாறு:-

    புதுவையில் ஏற்படுத்தப்படும் சுற்றுலா மண்டலம் அனைத்து தரப்பினரும் உபயோகிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

    புதுவையை சுற்றி நடக்கும் கருத்தரங்குகள் உள்ளடங்கிய தகவலை குறிப்பிட்ட பயனாளர்களின் உதவிக்கு தர வேண்டும். திருமண நிகழ்ச்சி மையங்கள் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு பதிலாக புதுமையான தனித்துவமான தலங்களை நிறுவ வேண்டும்.

    • கோழி இறைச்சியை சாப்பிட வரும் போது முதலை சிக்கும் என நம்பி காத்திருந்தனர்.
    • நள்ளிரவு 1.30 மணிக்கு முதலை கோழி இறைச்சியை சாப்பிட வெளியே வந்த போது கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜ் சாலையில் நேற்று பகல் உப்பனாறு வாய்க்காலில் முதலை குட்டி ஒன்று காணப்பட்டது.

    இதனை பாலத்தையொட்டியுள்ள கடையில் பணிபுரியும் ஊழியர் ஏழுமலை முதலில் பார்த்துள்ளார்.

    அவர் தனது நண்பரான ராஜாவிற்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து முதலையை புகைப்படம் எடுத்தார். அதற்குள் அங்கு கூடிய மக்கள் சுமார் 4 அடி நீளமுள்ள முதலையை புகைப்படம் எடுத்து வனத்துறைக்கு தெரிவித்தனர்.

    முதலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவல் அறிந்து காமராஜ் சாலையில் ஏராளமான பொது மக்கள் கூடினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பொதுமக்கள் பீதியும் அடைந்தனர்.

    அப்போது ஏற்பட்ட வாகன சத்தத்தால் முதலை தண்ணீருக்குள் மூழ்கி ஒளிந்து கொண்டது.

    இதனிடையே முதலையை பிடிக்க வாய்காலில் இறங்கிய வனத்துறையினர் முதலையை தேடினார்கள்.

    அங்கு வந்த வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி ஊழியர்களிடம் வாய்க்காலின் ஆழத்தை கணக்கிட கூறினார்.

    5 அடி ஆழம் இருந்ததால் நீரோட்டத்தை நிறுத்தி விட்டு முதலையை பிடிக்கலாமா.? அல்லது கூண்டு வைத்து பிடிக்கலாமா என ஆலோசித்தனர். இறுதியில் முதலையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

    வாய்க்கால் கரை ஓரம் வசிக்கும் பொதுமக்கள் முதலையை பார்த்தால் தானாக பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் தண்ணீருக்குள் இறங்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    இரவு 8 மணிக்கு முதலையை பிடிக்க கோழி இறைச்சியை வைத்து கூண்டு ஒன்றினை தயார்படுத்தினர். மக்கள் கூட்டம் குறைந்த பின்னர் வாகன நடமாட்டமும் குறைந்த பிறகு முதலை தென்பட்ட அதே இடத்தில் கூண்டை இறக்கி வைத்தனர்.

    கோழி இறைச்சியை சாப்பிட வரும் போது முதலை சிக்கும் என நம்பி காத்திருந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு முதலை கோழி இறைச்சியை சாப்பிட வெளியே வந்த போது கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

    இதனையடுத்து 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முதலையை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றனர்.

    புதுவை நகர பகுதியில் பிரதான சாலையை இணைக்கும் வகையில் செல்லும் உப்பனாறு வாய்க்காலில் முதலை வந்தது எப்படி.? என கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் வெள்ளவாரி வாய்க்காலில் இருந்து முதலை தண்ணீரில் அடித்து வரப்பட்டு உப்பனாற்றுக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

    • பாலத்துக்கு அடியில் முதலை இருப்பதாக ஒரு படம் சமூகவலை தளங்களில் பகிரப்பட்டது.
    • கனமழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படு கிறது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பனாறு வாய்க்கால் நகரின் முக்கிய பகுதிகளை இணைத்து சென்று உப்பளம் அருகே கடலில் கலக்கிறது.

    இந்த உப்பனாறு வாய்க்காலின் மீது பாலம் அமைத்தால் போக்கு வரத்து நெரிச லுக்கு தீர்வாக இருக்கும் என அரசு முடிவு செய்தது.

    காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மேல் பாலம் அமைக்க 2008-ல் அரசு திட்ட மிட்டது.

    இந்த வாய்க்கால் ஜீவா நகர் பகுதியில் தொடங்கி வாணரப் பேட்டை, வம்பா கீரப்பாளையம் வழியாக கடலுக்கு செல்கிறது. பாலம் அமைக்கும் பணி இதுவரை முழுமைய டைய வில்லை.

    இந்த வாய்க்காலில் காமராஜர் சாலை பகுதி யில் பாலம் கட்டுமான பணி பாதியில் நிற்கிறது.

    இந்த நிலையில் இன்று காலை காமராஜர் சாலை உப்பனார் கால்வாயை ஒட்டியுள்ள பர்னிச்சர் கடை ஊழியர் ஏழுமலை குப்பை கொட்ட சென்றார். அப்போது வாய்க்காலில் ஒரு முதலை இருப்பதை கண்டார்.

    சுமார் 4 அடி நீளம் இருந்த முதலை வாய்க்காலில் கழிவுநீரில் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து அவர் கடையில் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக இத்தகவல் அடுத்தடுத்த கடைக்காரர்க ளிடம் பரவியது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடியது.

    இந்த நிலையில் ஆள் அரவம் கேட்ட முதலை பாலத்தின் அடியில் சென்று விட்டது. இருப்பினும் முதலையை காண பொது மக்கள் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி பாலத்தில் நிற்க தொடங்கி னர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து பொது மக்களை அங்கிருந்து அகற்றினர். சிலர் முதலை பீதியில் ஓட்டம் பிடித்தனர்.

    வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் கால்வாயில் இறங்கி முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பாலத்துக்கு அடியில் முதலை இருப்பதாக ஒரு படம் சமூகவலை தளங்களில் பகிரப்பட்டது. உப்பனாறு வாய்க்காலில் முதலை என்ற தலைப்பில் அந்த படம் வைரலாக பரவியது.

    இதனால்தான் அப்பகுதியில் கூட்டம் கூடியது. முதலையை முதலில் பார்த்தவரை தவிர மற்றவர்கள் யாரும் பார்க்கவில்லை. இருப்பி னும் வனத்துறையினர் முதலையை பிடிப்பதற்காக தேடி வருகின்றனர்.

    கனமழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இவ்வாறு எங்காவது அணைக்கட்டு பகுதியி லிருந்து இந்த முதலை வந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

    ×