search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணப்பட்டில்  புதுமையான, தனித்துவமான சுற்றுலா தலத்தை நிறுவ வேண்டும்
    X

    கோப்பு படம்.

    மணப்பட்டில் புதுமையான, தனித்துவமான சுற்றுலா தலத்தை நிறுவ வேண்டும்

    • அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
    • புதுவையில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த மணப்பட்டில் பல்பொருள் சுற்றுலா மண்டலம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார்.தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா, பொதுப்பணித்துறைச் செயலர் மணிகண்டன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்ச்செல்வன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் சராசரியான செலவு திறன், புதுவையில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

    "சிங்கப்பூர் மாடல்" மற்றும் "கேரளா மாடல்" சுற்றுலா குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கவர்னர் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகள் வருமாறு:-

    புதுவையில் ஏற்படுத்தப்படும் சுற்றுலா மண்டலம் அனைத்து தரப்பினரும் உபயோகிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

    புதுவையை சுற்றி நடக்கும் கருத்தரங்குகள் உள்ளடங்கிய தகவலை குறிப்பிட்ட பயனாளர்களின் உதவிக்கு தர வேண்டும். திருமண நிகழ்ச்சி மையங்கள் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு பதிலாக புதுமையான தனித்துவமான தலங்களை நிறுவ வேண்டும்.

    Next Story
    ×