search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆம் ஆத்மி கட்சியினர் இன்று நூதன போராட்டத்தை நடத்தினர்.
    • சிங்காரவேலர், காமராஜர், அண்ணா, உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மனு கொடுத்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பேனர் தடை சட்டம் இருந்தாலும் சாலை யோரங்கள் தொடங்கி சிக்னல்களை மறைத்து டிஜிட்டல் பேனர்கள் அதிக ளவில் வைக்கப்படுகின்றன.

    டிஜிட்டல் பேனர்களால் நகரின் அழகு குறைந்தாலும், அதிகாரிகள் எவ்வித நட வடிக்கையும் எடுப்பதில்லை.

    இதையடுத்துஆம் ஆத்மி கட்சியினர் இன்று நூதன போராட்டத்தை நடத்தினர்.

    டிஜிட்டல் பேனர்களை சட்டையாக அணிந்து தலைவர்களின் பிறந்தநாள் எங்களுக்கு இறந்த நாளா? தலைவர்களே சிந்தியுங்கள். என்ற வாசகத்துடன் சிங்கார சிலையிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பயணம் காமராஜர் சிலை முன்பு முடிவடைந்தது.

    முடிவாக சிங்காரவேலர், காமராஜர், அண்ணா, உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மனு கொடுத்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.

    • அகண்ட திரையில் ரசிகர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • இந்தியா கலக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    புதுச்சேரி:

    உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியை புதுவை கடற்கரைச்சாலையில் அகண்ட திரையில் ரசிகர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் பல மது பார்களில் ரசிகர்கள் போட்டியை பார்க்க பெரிய திரையில் பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது.

    எல்லைப்புற பகுதிகளிலும் அகண்ட திரையில் போட்டியை காண ஏற்பாடு செய்திருந்தனர். ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட் செய்தது. அதில் சீராக விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தாலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் பந்து வீச்சில் இந்தியா கலக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    அதைத்தொடர்ந்து இந்திய அணி பவுலிங்கில் முதலில் கலக்கியது. ஷமி, பும்ரா ஆகியோர் 3 விக்கெட்டுகளை 50 ரன்களுக்குள் கழற்றியவுடன் ரசிகர்கள் குதூகல மானார்கள். ஆனால் அதன்பிறகு தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இயல்பாக விளையாடத் தொடங்கியது.

    விக்கெட் இழப்பின்றி சீராக ரன்களை குவித்ததால் கடற்கரை, மதுபார்களில் குவிந்திருந்த ரசிகர்கள் சோகமானார்கள். ஒருக்கட்டத்தில் இந்திய அணி வெல்ல வாய்ப்பில்லை என்று உணர்ந்த பின்பு கடற்கரை, பார்களில் இருந்து வெளியேறினர். 

    • தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்துள்ளனர்.
    • கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எத்தனைபேர் எத்தனை சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர் என அறிக்கையாக வெளியிடவேண்டும்.

    காலாப்பட்டு தனியார் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைந்து அருகில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தொழிற்சாலை சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தற்போது குழந்தை தொழிலாளர் ஒருவர் விபத்தில் இறந்துள்ளார். குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தியது தண்டனைக்குரிய குற்றம். இந்த குற்றத்தை செய்த நிறுவன உரிமையாளர், நிர்வாக இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் தலைவர் வலியுறுத்தல்
    • சங்கத்தில் பல்வேறு பிரச்சினை இருக்கும் வரை சங்க அலுவலகத்தை திறக்க கூடாது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் வீரர்கள் லீக் சங்கத்தின் முன்னாள் தலைவர் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பொருளாளர் இல்லாம லேயே நடத்தப்பட்டுள்ளது. வருடாந்திர சங்க கணக்கை பொதுச்செயலாளரை கொண்டு வாசித்துள்ளனர்.

    சங்கத்தில் பல்வேறு பிரச்சினை இருக்கும் வரை சங்க அலுவலகத்தை திறக்க கூடாது. சங்கத்தின் வங்கி கணக்கை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் வரை அரசு முடக்கி வைக்க வேண்டும்.

    ெடல்லி தலைமை சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ள படி தற்போது புதுவை சங்க தலைவர் மீதான விசாரணை முடிந்த பின்னரே சங்கத்து க்கு தேர்தல் முறையாக நடைபெற்று புதிய நிர்வா கிகள் தேர்தெடு க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பஸ் கட்டுப்பாட்டை இழந்து நரசிம்மன் மீது மோதி பின்னர் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது.
    • போக்கு வரத்து போலீசார் விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.

    புதுச்சேரி:

    கடலூரில் இருந்து புதுவைக்கு இன்று காலை பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை பட்டாம்பாக்கத்தை சேர்ந்த குணாளன் ஓட்டி வந்தார்.

    பஸ் கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நரசிம்மன் என்பவர் கடலூர்-புதுச்சேரி ரோட்டை கடக்க முயன்றார். இதனால் அவர் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் குணாளன் இடது பக்கம் திருப்பினார்.

    ஆனாலும் பஸ் கட்டுப்பாட்டை இழந்து நரசிம்மன் மீது மோதி பின்னர் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளும் காயம் அடைந்தனர்.

    மேலும் பஸ் கண்ணாடி உடைந்து சேதம் ஆனது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த னர். தகவல் அறிந்தவுடன் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஙபின்னர் காயம் அடைந்த நரசிம்மன் மற்றும் பஸ் பயணிகளை மீட்டு ஆம்பு லன்ஸ் மற்றும் ஆட்டோவில் ஏற்றி பிள்ளை யார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போக்கு வரத்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சோபனாவுக்கு இருதய நோய் இருந்து வந்தது
    • வீட்டின் மாடிப்படி இருந்து கீழே இறங்கி வந்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் பழைய காமராஜ் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சோபனா (54). இவரது சொந்த ஊர் விருத்தாசலம் ஆகும். கடந்த 1 ½ ஆண்டுகளாக சோபனா பாகூரில் வசித்து வந்தார்.

    இவரது சகோதரர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சோபனாவுக்கு இருதய நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மாதந்தோறும் மருத்துவபரிசோதனைக்காக இன்று காலை ஆஸ்பத்திரிக்கு செல்ல வீட்டின் மாடிப்படி இருந்து கீழே இறங்கி வந்தார்.

    அப்போது திடீரென சோபனாவுக்கு மயக்கம் வந்ததால் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர்.

    உடனே இது குறித்து பாகூர் மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். வெகு நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராதால் பொதுமக்கள் மருத்துவ மனைக்கு சென்று பார்த்தனர். அப்போது 108 ஆம்புலன்ஸ் கடந்த 3 நாட்களாக பஞ்சராகி இருப்பதை கண்டனர். இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் இது குறித்து கரிக்கலாம் பாக்கம் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சோபனாவை கொண்டு சென்றனர். அங்க பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஷோபனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    குறித்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.

    • பாரத் சங்கல்ப் யாத்ரா எனும் திட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • திட்டத்தின் மூலம் கிடைத்த நன்மைகளைப் பற்றி கூறினார்கள்.

    புதுச்சேரி:

    நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா எனும் திட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    அதன் ஒருபகுதியாக புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணவெளி தொகுதி டி.என்.பாளையம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சங்கல்ப் யாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    சங்கல்ப பிரசார வாகனத்தில் மத்திய அரசின் திட்ட செயல் விளக்க குறித்த வாகன நிறுத்தப்பட்டு மத்திய அரசு திட்டங்களை விளக்கப் பட்டது இதில் பிரதமரின் உரை, மத்திய அரசு திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் தங்கள் திட்டத்தின் மூலம் கிடைத்த நன்மைகளைப் பற்றி கூறினார்கள்.

    மேலும் கிராமத்தில் தேசிய அளவில் வெற்றி பெற்ற பல்வேறு துறை சேர்ந்த வீராங்கனைகள் வீரர்களை கவுரவிக்கப்பட்டது. ஜல்ஜீவன் திட்டம் மற்றும் எஸ்.பி.எம். திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட நடைபெற்ற திட்டத்தின் சான்றிதழ் அந்த கிராமத்தில் வியு.எஸ்.சி. குழுவின் மூலம் வழங்கப்பட்ட து. மேலும் பல துறைகள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் விடுபட்ட பயனாளிகளை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    மேலும் பள்ளி வளாகத்தில் மருத்துவ பரிசோதனை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பிரசார வாகன யாத்திரையை தொடங்கி வைத்தார்.

    இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மாவட்ட கலெக்டர் வல்லவன், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

    இதில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் விமர்சை யாக கொண்டாடப்பட்டது.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கோரிக்கை
    • புதுவையில் மீனவ மக்கள் 3-வது மிகப்பெரிய சமுதாயமாக இருக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக மீனவர் தினம் நவம்பர் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலக நாடுகள் அனைத்தும் மீனவர்களின் பங்களிப்பினை போற்றி பாராட்டி வருகின்றன. புதுவையில் மீனவ மக்கள் 3-வது மிகப்பெரிய சமுதாயமாக இருக்கின்றனர்.

    இங்கு வசிக்கும் மீனவர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.330 கோடிமதிப்புள்ள மீனை உற்பத்தி செய்து, மாநில வருவாய்க்கு அளிக்கின்றனர். இருப்பினும் அவர்களை எதிர்நோக்கி உள்ள சவால்களை அரசு சரியாக கையாளவில்லை. மீனவர்கள் தொழிலுக்கு அவசியமான கட்டுமானத்தை அரசு உருவாக்கவில்லை.

    புதுவை அரசு ரூ.70 கோடியை மட்டும் அந்த சமூகத்துக்கு செலவிடுகிறது. பெரும்பாலான மீனவ மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். சமூக ரீதியாக அவர்களது பிள்ளைகள் தரமான கல்வியையும் வேலை வாய்ப்பினையும் பெற முடியவில்லை. புதுவை மீனவர்கள் கோரும் ஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்தினால்தான் அவர்களுக்கு உண்மையான சமூக நீதி கிடைக்கும். புதுவை அரசு மீனவ மக்களுக்காக சிறப்புக் கூறு திட்டம் ஒன்றை உருவாக்கி அவர்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வழிசெய்வதே மீனவர்களுக்கு இந்த அரசு செய்யும் பெரிய சேவையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்த விடாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
    • தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் புதுவை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் கீ.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களை கவர்னர்களாக நியமித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்த விடாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றினால் ஆளுகின்ற அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்ற காரணத்தினால் கவர்னர்களை வைத்து போட்டி அரசாங்கம் நடத்துகின்றனர். இது சட்டவிரோதம்.

    அ.தி.மு.கவின் குடுமி கவர்னர் கையில் உள்ளது. ஊழல் பட்டியல் அவரிடம் உள்ளது. தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

    புதுவையில் பழங்குடியின மக்களை தரையில் அமர வைக்கப்பட்டதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு என்பது பூசணிக்காயை அல்ல பெரிய மலையை சோத்துக்குள் மறைப்பதாகும்.

    புதுவை மக்கள் பா.ஜனதாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை. தற்போது தான் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். ஒரு வேலை பழங்குடியின மக்களை புதுவையில் தரையில் அமர வைத்த சம்பவம் புதுவை மாடலாக இருக்குமோ.?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கென்னடி எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்
    • விழாவிற்கு பொறுப்பாசிரியை வசுதா தலைமை தாங்கினார் ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட தாவீதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவினை முன்னிட்டு வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, சிறந்த கையெழுத்துப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

    விழாவில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்துக் கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவிற்கு பொறுப்பாசிரியை வசுதா தலைமை தாங்கினார் ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்புரையாற்றினார்.

    ஆசிரியை செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் ஆசிரியை கனகலட்சுமி நன்றி கூறினார். விழாவில் தி.மு,க. நிர்வாகிகள் சந்துரு, விநாயகமூர்த்தி, ராகேஷ், பஸ்கல் மற்றும் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    • விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை புதுவை அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.

    தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், சதீஷ், செந்தில்வேல், ஆறு முகம், அசோக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விளையாட்டு வீரர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்க வேண்டிய ஊக் கத்தொகை, உதவித்தொகையை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை புதுவை அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு, நடைபயிற்சி மேற்கொள்ள வருவோரிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. அவ்வாறான முயற்சிகளை அரசு நடைமுறைக்கு கொண்டு வரக் கூடாது.

    தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் முழு வதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, போதிய காவலாளிகளை பணிக்கு அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

    • அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை
    • டிஜிட்டல் முறையில் அனைத்து பணிகளையும் கண்காணிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை யொட்டி அரசின் சார்பு செயலர் கண்ணன் அனைத்து துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அனைத்து அரசு அலுவலகங்களிலும் 6 மாதத்திற்குள் லஞ்சத்துக்கு எதிரான மேலாண்மை நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். அதன்படி அரசு அலுவலகங்களில் ஜனவரி 1-ந் தேதிக்குள் பயோ மெட்ரிக் வருகை பதிவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கவர்னரிடம் வரும் புகார்கள், குறைதீர்க்கும் நாளில் பெறப்படும் புகார்களுக்கு 30 நாட்களில் தீர்வு காண வேண்டும். 2 மாதத்திற்குள் அனைத்து புகார்களும் நேர்மையான முறையில் தீர்க்கப்பட வேண்டும். டிஜிட்டல் முறையில் அனைத்து பணிகளையும் கண்காணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை வாரம் ஒருமுறை ஆய்வு செய்து அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×